யாருமே எதிர்பாராத வகையில் மர்மர் படத்தின் வசூல்...! 4வது நாளில் எவ்வளவுன்னு பாருங்க!

by Sankaran |   ( Updated:2025-03-10 05:35:04  )
murmur
X

.கடந்த 7ம் தேதி 6 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் மர்மர் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு. ஹேமந்த்நாராயணன் இயக்கத்தில் வெளியான மர்மர் படத்தில் புதுவிதமாக திகில் சம்பவம் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.

பாசிடிவான விமர்சனங்கள்: முதல் நாளில் ௩௦ தியேட்டர்களில் போடப்பட்ட இந்தப் படம் இப்போது 200 தியேட்டர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் இந்தப் படத்துடன் ரிலீஸ் ஆன எமகாதகி, ஜென்டில்உமன் படங்களுக்கும் பாசிடிவான விமர்சனங்கள் வந்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி மர்மருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் கொடூரமான முகத்துடன் எந்தவிதமான பேய்களையும் காட்ட மாட்டார்கள். பேய்க்காற்று அடித்து ஜன்னல்கள், கதவுகள் உடையாது. திரைச்சீலைகள் பறக்காது.

காட்டுல பயணிக்கும் கதை: முழுக்க முழுக்க காட்டுல நாலு பேரு பயணிக்கும் கதைதான். அந்தப்பயணத்துடன் படம் பார்க்கும் நாமும் ஒரு ஆளாக மாறிவிடுவோம். கேமரா ஆங்கிளில் வித்தியாசம் காட்டி ரசிகர்களுக்கு அதிகமாக 'திக் திக்' வரச் செய்துள்ளனர். அதனால் தான் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது.


ஹாரர் படங்கள்: திகில் படங்களின் காலமாகவே இது மாறிவிட்டது. வாரம் வாரம் ஏதாவது ஒரு திகில் படம் வந்து விடுகிறது. கடந்த வாரத்தில் 2 படங்கள், அதற்கு முன் அகத்தியா, சப்தம் என 2 படங்கள் வந்துள்ளன. ஆனாலும் புதுமையை விரும்பும் தமிழ் ரசிகர்கள் அப்படி முயற்சி செய்தால் கண்டிப்பாக வரவேற்பார்கள். அதனால்தான் பேக்ரவுண்டு மியூசிக்கே இல்லாமல் வெளியான மர்மர் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

4வது நாளில் வசூல்: படத்தின் வசூல் விவரத்தைப் பார்க்கலாமா... முதல் நாளில் வெறும் 10 லட்சமாக இருந்த படத்தின் வசூல் படிப்படியாக உயர்ந்துள்ளது. 2வது நாளில் 49 லட்சமாகவும், 3வது நாளில் 1.45 கோடியாகவும் இருந்தன. அதே நேரம் நேற்று 4வது நாளில் இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் 2.4 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.

Next Story