இப்படியே போனா கல்லா கட்டுமா NEEK?!... இரண்டு நாள் வசூல் இவ்வளவுதானா?!...

NEEK Collection: ஏற்கனவே பவர் பாண்டி, ராயன் என இரண்டு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த தனுஷ் இயக்கத்தில் மூன்றாவதாக வெளிவந்துள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அவரின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ்வாரியர், சரத்குமர், சரண்யா பொன்வண்ணன், ஜேம்ஸ் மேத்யூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த கால 2k கிட்ஸ்களை கவரும் வகையில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் தனுஷ். 2k கிட்ஸ்களின் கல்லூரி வாழ்க்கையில் வரும் காதல், காதல் தோல்வி மற்றும் திருமணத்தை அவர்கள் எப்படி அணுகிறார்கள் என காட்டியிருக்கிறார் தனுஷ். 80களில் சினிமாவில் காட்டப்பட்ட காதல் தோல்வி போலவெல்லாம் இப்போது இல்லை என காட்டியிருக்கிறார்.
எனவே 2k கிட்ஸ்கள் இந்த படத்தை அதிகம் பார்த்து ரசித்து வருகிறார்கள். அதேநேரம், மற்றவர்களும் பார்த்து ரசிக்கும்படியே திரைக்கதையை அமைத்திருக்கிறார். அனுபமா பெரிய பணக்காரர் மகள் என்பது தெரியாமலேயே அவரை காதலிக்கிறார் பவிஷ். ஆனால், அவரின் வீடு மற்றும் அவரின் அப்பாவை பார்த்தபின் ஜெர்க் ஆகிறார்.
அனிகாவின் அப்பா சரத்குமாரால் அந்த காதல் உடைகிறது. அதன்பின் அனிகா எங்கே இருக்கிறார் என்பது கூட பவிஷுக்கு தெரியவில்லை. சில வருடங்களில் தன்னுடன் படித்த பிரிய பிரகாஷ்வாரியரை பெண் பார்க்க போகிறார். அங்கு போனபின்னர்தான் அவர் பள்ளியில் தன்னுடன் படித்தவர் எனத்தெரிகிறது.
பிரியா பிரகாஷ் கல்யாணத்திற்கு நிறைய கண்டிஷன் போட, அந்த நேரத்தில் அனிகாவின் திருமண பத்திரிக்கை பவிஷுக்கு வர என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார் தனுஷ். இந்த படம் முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான நேற்றும் 1.15 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, 2 நாட்களில் இப்படம் 3 கோடியை வசூல் செய்துள்ளது.
இன்று ஞாயிறு என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பெரிய பட்ஜெட் இல்லை. சரத்குமாரை தவிர எல்லோருமே சின்ன நடிகர்கள் என்பதால் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை தனுஷ் உருவாக்கியிருக்கிறார். எனவே, கண்டிப்பாக அவருக்கு லாபம் கிடைக்கும் என்றே கணிக்கப்படுகிறது. ஒருபக்கம், இப்படத்துடன் வெளியான டிராகன் படம் 16.75 கோடி வசூல் செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.