பறக்க ஆரம்பித்த கலெக்சன்: பறந்து போ 4ம் நாள் வசூல் நிலவரம்

by Cine Reporter |   ( Updated:2025-07-08 06:11:08  )
பறந்துபோ
X

மிர்சி சிவா, அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பறந்து போ. ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்சி சிவா என்றதும் பலரும் இது எப்படி செட்டாகும் என பேசினர். வழக்கமாக மொக்கை காமெடியை வைத்துகொண்டு மிர்ச்சி சிவாவின் படங்கள் நிறைய வந்துள்ளது. ஆனால், இயக்குனர் ராம் சிவாவை இப்படத்தில் மிக வித்யாசமாக காட்டியுள்ளார்.

அதனால் படம் வெளியான நாளிலிருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இபடத்திற்கு நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகின்றது.




இந்த நிலையில் 4 நாட்கள் ஆகியுள்ள இப்படத்திற்கான 4ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 4ம் நாளில் உலகளவில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது.

Next Story