பாகுபலி கேஜிஎஃப் ஆர்ஆர்ஆர் படங்களை பஞ்சராக்கிய புஷ்பா 2!... 6-வது நாளில் 1000 கோடி..!
புஷ்பா 2 திரைப்படம்:
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இப்படத்தின் 2-வது பாகத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்தார்கள். கடந்த 3 வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வந்தது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் விமர்சனம்:
படம் வெளியானது முதலே ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடங்களுக்கு ரசிகர்களை இருக்கையில் நுனியில் அமர வைத்திருக்கின்றார் இயக்குனர் சுகுமார்.
மேலும் அல்லு அர்ஜுன் படம் முழுவதையும் தனது தொழில் சுமந்து இருக்கின்றார். படத்தின் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக இருந்தது. படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் அது ஒரு குறையாக ரசிகர்களுக்கு தெரியவில்லை. படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ்க்கு முன்னரே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது.
படத்தின் வசூல்:
பிரீ ரிலீசில் மட்டும் 275 கோடிக்கு விற்பனையானது. மற்ற ஆன்லைன் வியாபாரங்கள் உள்ளிடவற்றில் ரூபாய் 400 கோடிக்கு மேல் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. படம் வெளியான நாள் முதலே பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றது.
முதல் நாளில் படம் 294 கோடியை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து 2-வது நாளில் 449 கோடி, மூன்றாவது நாளில் 621 கோடி, நான்காவது நாளில் 829 கோடி, 5 வது நாளில் 922 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
நேற்று மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 85 முதல் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் வசூல் 1000 கோடியில் இருந்து 1015 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. சினிமாவிலேயே அதிவேகமாக 1000 கோடிகளை அள்ளிய படம் என்றால் அது புஷ்பா 2 திரைப்படம் தான்.
தொடர்ந்து பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் ரெக்கார்டுகள் அனைத்தையும் முறியடித்து டாப் இடத்தை பிடித்திருக்கின்றது. புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருப்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் 2000 கோடியை வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தெலுங்கு மொழியை தாண்டி இந்தி மொழியில் படம் சக்க போடு போட்டு வருகின்றது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.