ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 10 நாள் வசூல்... ரெண்டுல பெஸ்ட் இதுதான்!

by SANKARAN |
retro, tourist family
X

தமிழ்த்திரை உலகில் சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருக்கும்பட்சத்தில் வெற்றி வாகை சூடுகின்றன. இது இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நிரூபித்து வருகின்றன. குடும்பஸ்தன், டிராகன் படங்களைத் தொடர்;ந்து தற்போது டூரிஸ்ட் ஃபேம்லி படமும் சக்கை போடு போட்டு வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களில் வெறும் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் மசாலா மட்டும் கலந்து வருவதால் ரசிகர்களுக்கு அதன் திரைக்கதை நல்லா இருந்தால் மட்டுமே பிடிக்கிறது. கதை சவ்வு மாதிரி இழு இழுன்னு இழுத்தால் அதை புறம் தள்ளி விடுகிறார். ரெட்ரோ படத்தின் நீளம் அதிகம். படத்தின் தேவையில்லாத காட்சிகளை சுருக்கி டிரிம் பண்ணி இருந்தால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இருந்தாலும் சூர்யாவுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தியேட்ரிக்கல் ஹிட் என்று எதுவும் இல்லாத பட்சத்தில் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு ஆறுதல் அளிக்கிறது. இந்தப் படம் உலகளவில் 104 கோடியை கிராஸ் பண்ணியுள்ளதாக 2 டி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் படத்தின் சக்சஸ் மீட்டில் சூர்யா லாபத்தில் 10 கோடியை எடுத்து அகரம் கல்வி அறக்கட்டளைக்குக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 10 நாள் வசூல் எவ்வளவுன்னு பார்க்கலாமா...


இந்திய அளவில் ரெட்ரோ படத்தின் 10வது நாள் வசூல் 1.25 கோடி. மொத்த வசூல் 55.25 கோடி. டூரிஸ்ட் ஃபேம்லி படத்தின் 10வது நாள் வசூல் 4.75 கோடி. இது முதல் நாளில் இருந்து 9 நாள்களாக இல்லாத வசூல். அந்த வகையில் 10வது நாள் வசூல்தான் அதிகம். இந்தப் படத்தின் 10 நாள்கள் செய்த மொத்த வசூல் 28 கோடி. இந்த இரு படங்களில் ரெட்ரோ படத்தைக் காட்டிலும் விமர்சகர்கள் டூரிஸ்ட் ஃபேம்லி படத்தைத் தான் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story