Dhanush: தனுஷுக்கு 6வது 100 கோடி வசூல்!.. ஹிந்தியிலும் சும்மா கலக்குறாரே!...
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என கோலிவுட்டில் கலக்கி வருபவர் தனுஷ். ஒருபக்கம் ஜனரஞ்சகமாக கமர்ஷியல் படங்களிலும், ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட ஆடுகளம், அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். 2 முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். இதைவிட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு தமிழ் சினிமா நடிகர் பாலிவுட்டில் கால் பதித்து வெற்றிப் படங்களை கொடுப்பது என்பது சாதாரணமானது இல்லை. ஏனெனில் அங்கே மற்ற மொழி நடிகர்களை வளர விட மாட்டார்கள்.
ரஜினி, கமல் ஆகியோர் துவக்கத்தில் ஹிந்தியில் நிறைய படங்களில் நடித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களும் அதை புரிந்து கொண்டு அங்கே நடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.
தனுஷும் இதுவரை நான்கு ஹிந்தி படங்களில் நடித்து விட்டார். அந்த படங்கள் எல்லாமே ஹிந்தி ரசிகர்களிடம் வரவேர்பை பெற்றது.

தனுஷை வைத்து ஏற்கனவே இரண்டு ஹிந்தி படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் மூன்றாவதாக மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய படம்தான் Tere Ishk Mein. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டது. ஹிந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா 100 கோடி வசூலை பெற்றது. அதன்பின் திருச்சிற்றம்பலம், வாத்தி, ராயன், குபேரா ஆகிய படங்களும் 100 கோடி வசூலை தொட்டது. இந்நிலையில்தான் அவரின் அடுத்த 100 கோடி வசூல் என்கிற பெருமையை Tere Ishk Mein பெற்றிருக்கிறது.
