இவ்வளவு புரமோஷன் கொடுத்தும் வீணாப்போச்சே!.. கமலுக்கு போட்ட காசாவது வருமா?...

by MURUGAN |
thug life
X

Thug life collection: தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. இந்திய அளவிலும் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான தக் லைப் படம் நேற்று ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் சிம்புவுக்கு இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரம் இருந்தது.

நாயகன் படம் வெளியாகி 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு, திரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை போன்ற காரணங்களால் ரசிகர்கள் படம் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த படத்தின் பாடல்களும் யுடியூப்பில் செம ஹிட் அடித்தது. குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் பலரையும் ரிப்பீட் மோடில் ரசிக்க வைத்தது. எனவே, படம் பார்க்க பலரும் ஆசைப்பட்டனர். ஆனால், படமோ ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது.


படத்தில் கதை, திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை. வழக்கமான கேங்ஸ்டர் படமாகவே தக் லைப் உருவாகியிருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். படத்தில் வரும் எந்த காட்சியும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கவில்லை. 2.45 மணி நேரம் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் ரசிகர்கள் அமைதியாக படம் பார்க்கிறார்கள் என சொல்கிறார்கள்.

படத்திற்கு இருந்த ஹைப்புக்கு இப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். கமலும் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால், முதல் நாளில் இப்படம் இந்தியன் 2 வசூலை கூட பெறவில்லை. இந்தியன் 2 படம் முதல் நாள் இந்தியாவில் 25 கோடி வசூல் செய்தது.

ஆனால், தக் லைப் படம் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக முதல் நாளில் இந்தியாவில் வெறும் 17 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் படம் நன்றாக இல்லை என பலரும் பதிவிட்டு வருவதால் இந்த வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பெரிய வசூல் இருக்காது என்றே கருதப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 250லிருந்து 300 கோடி என சொல்லப்படும் நிலையில் கமலுக்கு இது தோல்விப்படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.

Next Story