காத்து வாங்கும் தியேட்டர்கள்!. 50 கோடியை கூட தொடாத தக் லைப்!.. ஒரு வாரம் கூட தாங்கலயே!..

by MURUGAN |
thug life
X

Thug life: நாயகன் படத்திற்கு பின் 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் இணைந்த படம்தான் தக் லைப். அதோடு, இந்த படத்தில் சிம்புவும் இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்த பாடல்களும் யுடியூப்பில் ஹிட் அடித்தது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களை ரிப்பீட் மோடில் ரசிக்க வைத்தது.

அதோடு, இந்த படத்திற்க்கு தக் லைப் படக்குழு அதிக அளவில் புரமோஷனும் செய்தது. கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தனர். ரசிகர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்து உரையாடினார்கள். மேலும், கமல், மணிரத்னம் இருவரும் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள்.

ஆனால், தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களில் பலரும் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொன்னர்கள். மேலும், கமலுக்கு சின்ன வீடு திரிஷா. அந்த திரிஷாவையும் சிம்பு அடைய முயற்சி செய்கிறார் என பலரும் சமூகவலைத்தளங்களில் அசிங்கமாக விமர்சனம் செய்தார்கள்.


இயக்குனர் மணிரத்னம் இதுவரை இந்த அளவுக்கு அசிங்கப்பட்டிருக்கமாட்டார் என சொல்லும் அளவுக்கு எல்லை மீறி அவரை நக்கலடித்து மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். எனவே, படத்தின் வசூல் கடுமையாக பாதித்தது. படம் வெளியாகி சரியாக ஒரு வாரம் ஆன நிலையில் இப்படம் இந்தியாவில் 42.25 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்தியாவில் இப்படத்தின் வசூல் 50 கோடியை கூட தாண்டவில்லை. ஒருபக்கம், கன்னட மொழி பற்றி பேசியதால் கர்நாடகாவிலும் இப்படம் வெளியாகவில்லை. ஓடிடி வியாபாரமும் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த வாரம் திங்கள் கிழமை முதலே தியேட்டர்கள் காத்து வாங்க துவங்கியது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வருவதால் தக் லைப் படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டுவிடும் என சொல்கிறார்கள். ஏற்கனவே இந்தியன் 2 படம் தோல்வி அடைந்த நிலையில் தக் லைப் படமும் கமலுக்கு கை கொடுக்கவில்லை. எனவே, அடுத்து அன்பு - அறிவு இயக்கத்தில் நடிக்கும் படத்தையே அவர் நம்பியிருக்கிறார்.

Next Story