Thuglife 3rd day collection: தக் லைஃப் படத்தின் 3ம் நாள் வசூல்... தேறுமா, தேறாதா?

by SANKARAN |   ( Updated:2025-06-08 01:30:21  )
thuglife 3rd day
X

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக்செல்வன் நடித்த படம் தக் லைஃப். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆர்.கே.ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் இருந்தும் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு சொல்லப்படும் காரணம் திரைக்கதையில் கோட்டை விட்டதுதான். லாபம் ஒன்றே குறியாகக் கொண்டு பழைய இயக்குனர்கள் அதாவது 50 வயதைக் கடந்த இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கமல் போன்ற பெரிய லெஜண்ட் நடிகர் கலாச்சார சீரழிவு கொண்ட கதை அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளார் என்பதால் தக் லைஃப்புக்கு ட்ரோல்கள், மீம்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளன. கமல் சிம்பு தந்தை மகன்களாக உள்ளனர்.

கமல் சிம்புவை எடுத்து வளர்க்கிறார். தாதாக்களாக இருக்கும் இவர்கள் ஒரே பொண்ணுக்கு ஆசைப்படுகின்றனர். திரிஷா தான் அவர். அப்படின்னா கதை எங்கே போகுது? கேங்ஸ்டர் கதையா? பிட்டுப்படமா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இதுவே படத்தோல்விக்குக் காரணமாம்.


படத்திற்கு புரொமோஷன் படு ஜோராக நடந்தது. கமலின் கன்னட மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகாவில் திரையிடவில்லை. பெரும் பிரச்சனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் படம் கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் முதல்நாள் வசூலும் எதிர்பார்த்தபடி இல்லை. குறிப்பாக இந்தியன் 2, ரெட்ரோ படங்களை விட குறைவாகவே இருந்தது.

இப்போது 3 நாள்கள் என்ன வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம். sacnilk ரிப்போர்டின்படி முதல் நாளில் 15.5கோடி, 2வது நாளில் 7.15கோடி, 3வது நாளில் 7.50கோடி என 3 நாளில் செய்த மொத்த வசூல் 30.15 கோடி. முதல் 2 நாளில் உலகளவில் 52 கோடி வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட் 180 கோடி. படம் தேறுமா, தேறாதா என இந்த 3 விடுமுறை நாள்களில் தெரிந்து விடும்.

Next Story