2025-ல் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்!.. முதலிடத்தில் எம்புரான்!....

by MURUGAN |
2025-ல் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்!.. முதலிடத்தில் எம்புரான்!....
X

இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மொழியிலும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இதில், பெரிய நடிகர்கள் முதல் சின்ன படங்கள் வரை அடக்கம்.

2025ல் இதுவரை 6 மாதங்கள் முடிந்திருக்கிறது. இந்த ஆறு மாதங்களில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அதிக வசூலை பெற்ற டாப் 10 படங்களை பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் எம்புரான் இருக்கிறது. மலையாள படமான எம்புரானை நடிகர் பிரித்திவிராஜ் இயக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல உருவான இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 265.60 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது.


அடுத்து தில் ராஜு இயக்கத்தில் தெலுங்கு படமாக வெளிவந்த சங்கராந்திக்கி வஸ்துனம் படம் 2வது இடத்தில் இருக்கிறது. வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து காமெடி படமாக வெளியான இப்படம் 248.15 கோடி வசூல் செய்திருக்கிறது. 3வது இடத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து 245.10 கோடி வசூல் செய்தது.

4வது இடத்தில் மோகன்லாலின் துடரும் படம் இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த இந்த படம் 232.60 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். 5வது இடத்தில் கேம் சேஞ்சர் இருக்கிறது. தில் ராஜு இயக்கத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து உருவான இப்படம் 178.35 கோடி வசூல் செய்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது.


6வது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்து 151.85 கோடி வசூல் செய்தது. 7வது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் 138.10 கோடி வசூல் செய்தது.

8வது இடத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான குபேரா படம் இருக்கிறது. இந்த படம் தமிழில் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்றது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 129 கோடி வசூல் செய்திருக்கிறது. 9வது இடத்தில் பாலையாவின் தெலுங்கு படமான டக்கு மகாராஜ் இருக்கிறது. இப்படம் இதுவரை 116.50 கோடி வசூல் செய்திருக்கிறது. 10வது இடத்தில் நானியின் HIT3 படம் இருக்கிறது.

மொத்தத்தில் அதிக வசூலை பெற்ற டாப் தென்னிந்திய படங்களில் 2 மலையாள படங்களும், 5 தெலுங்கு படங்களும், 3 தமிழ் படங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story