சென்டிமெண்ட்டை விட பேய்தான் ஹிட்டு!.. டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல் அப்டேட்!...

கடந்த வெள்ளிக்கிழமை சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கையை தட்டுங்க போன்ற படங்கள் வெளியானது. இதில், யோகிபாபு படத்தை பற்றி யாரும் பேசவில்லை. ஏனெனில், அந்த படத்திற்கு புரமோஷனே செய்யப்படவில்லை. எனவே, அப்படி ஒரு படம் வெளியானதே யாருக்கும் தெரியவில்லை.
எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் மாமன் ஆகிய 2 படங்கள் மட்டுமே போட்டியில் இருக்கிறது. விடுதலை, விடுதலை 2, கருடன் போன்ற படங்களுக்கு பின் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கும் திரைப்படம் மாமன். இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கிறார்.
மேலும், சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இந்த படம் பற்றி பேசிய ஐஸ்வர்யா ‘எல்லோரும் ஏன் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள்?’ எனக்கேட்டார்கள். அதில் என்ன தவறு என தெரியவிலை. அவர் ஒரு அற்புதமான மனிதர். மிகவும் அன்பானவர் என பேசியிருந்தார். இந்த படம் வெளியான போது ‘அழுகும்படி நிறைய காட்சிகள் இருக்கிறது. படத்தில் காமெடி என்பது இல்லை’ என விமர்சனம் வந்தது.
ஒருபக்கம், சந்தானம் தனக்கு எப்போதும் கை கொடுக்கும் ஹாரர் காமெடி பட கதையில் நடித்து உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றது. முதல்பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் பேய் வரும் காமெடிகள் சிறப்பாக இருப்பதாக டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.
வசூலை பார்க்கும்போது மாமன் படம் முதல் நாளில் 1.75 கோடியை வசூல் செய்தது. சந்தானம் படம் முதல் நாளிலேயே 3 கோடியை வசூல் செய்துவிட்டது. இதைப்பார்க்கும் போது சூரியை விட சந்தானத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருப்பது தெரிந்தது. 2ம் நாளான நேற்று மாமன் படம் 2.38 கோடியையும், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் 2.75 கோடியையும் வசூல் செய்திருக்கிறது.
மொத்தத்தில் 2 நாட்களில் மாமன் படம் 4.13 கோடியையும், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் 5.75 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. மாமனை விட ஒன்றரை கோடி அதிக வசூலை சந்தானம் படம் பெற்றிருக்கிறது.