vanankaan: வணங்கான் படத்தின் முதல் நாள் வசூல்... அருண்விஜய் கண்ணீர்!

by Sankaran |   ( Updated:2025-01-11 02:00:28  )
vanankaan
X

இயக்குனர் பாலாவின் வணங்கான் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அருண் விஜய் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாள் வசூல் என்னன்னு பார்க்கலாமா...

பிதாமகன், நந்தா: இவரது மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்தப் படம் எதிர்பார்ப்பை சற்றே பூர்த்தி செய்து உள்ளது. நேற்று கலவையான விமர்சனங்கள் வந்தன. இனி வரும் நாள்களில் தான் இதன் முழு ரிசல்ட் தெரிய வரும்.

வழக்கமான பாலா படம்தான். பிதாமகன், நந்தா கலவை மாதிரி உள்ளது என்கிறார்கள். ஒரு விஷயத்தை வெளியே சொன்னால் நாலு பேர் பாதிக்கப்படுவாங்க. அதனால சொல்லக்கூடாது. அதுதான் படத்தின் கதைக்கரு. மாற்றுத்திறனாளிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.


திருப்புமுனை: ஹீரோவால பேச முடியவில்லை என்றாலும் அவரது கோபத்தை உடல்மொழியால் அழகாகக் கொண்டுவந்துள்ளார். பாலாவுக்கு இது 25வது படம். அருண்விஜய்க்குத் திருப்புமுனையாக அமைந்த படம். கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது என்கிறார்கள்.

மாற்றுத்திறனாளியின் வலியை அதே போல இன்னொரு மாற்றுத்திறனாளியால தான் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். நல்ல கருத்துகளைத் தாங்கி வந்துள்ளதால் இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும்னு சொல்றாங்க.

திறமைக்குத் தீனி: கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். தங்கச்சி சென்டிமென்ட் சூப்பராக இருப்பதாகவும், அருண்விஜயின் திறமைக்குத் தீனி போட்ட படமாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விக்ரமுக்கு பிதாமகன் என்றால் அருண்விஜய்க்கு வணங்கான் என்கிறார்கள்.

முதல்நாளான நேற்று படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா... முதல் நாளான நேற்று இரவு 9 மணி வரை 50 லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து 0.86 கோடி என்றும் அதன் வசூல் அதிகரித்தது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி. படமானது பொங்கல் தினத்தைக் குறிவைத்து முன்னரே ரிலீஸ் ஆகியுள்ளது. இனி வரும் நாள்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்விஜய் கண்ணீர்: அருண்விஜயைப் பொருத்தவரை என்னை அறிந்தால் படம் தான் அவருக்குத் திருப்புமுனையாக இருந்துள்ளது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து அவருக்கு பெரிய ஹிட் கொடுத்த படம் வணங்கான். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரசிகர்களின் வரவேற்பைப் பார்க்கும்போது நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் சந்தோஷமாக மாறி இருக்கு. ரசிகர்களுக்கும் பாலா சாருக்கும் நன்றி. இது அவரோட கனவு. இன்னிக்கி என் நடிப்பை பத்தி அவ்ளோ சொல்லி இருக்காங்க. நன்றி என வணங்கான் படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியேறினார்.

Next Story