வணங்கான் படத்தின் 2ம் நாள் கலெக்ஷன்... பாலாவின் 25வது படத்தின் மாஸைப் பாருங்க...
தமிழ்த்திரை உலகில் ரசிகர்களின் ரசனை நாளுக்கு நாள் மாறி வருகிறது. இன்னும் அரைத்த மாவையே அரைத்தால் அந்தக் கதை எடுபடாது. அதனால் ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு பல இளம் இயக்குனர்கள் படை எடுத்து வருகிறார்கள். அதே நேரம் பழைய இயக்குனர்களின் டிரேடு மார்க்கையும் அவ்வப்போது ரசிக்கிறார்கள்.
இந்த வருடம் ஷங்கர், பாலா ஆகிய பெரிய இயக்குனர்களின் படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளது. ஷங்கருக்கு கேம் சேஞ்சரும், பாலாவுக்கு வணங்கான் படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்போது வணங்கான் படத்தின் 2ம் நாள் வசூலைப் பார்க்கலாம்.
பாலாவின் 25வது படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் வணங்கான். இந்தப் படம் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது. முதல்நாளே பாலா படம் என்றதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அது மட்டும் அல்லாமல் இந்தப் படம் சூர்யா நடிக்க வேண்டியது. ஆனால் அவர் விலக அருண்விஜய் நடித்துள்ளார்.
கதைக்காக நாயகன்: இதுதான் அருண்விஜய்க்கு பாலாவுடனான முதல் காம்போ. அதனால் படம் எப்படி இருக்கும்? அருண்விஜய் நடிப்பு எப்படி இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. பாலாவின் படங்களைப் பொருத்தவரை அவர் கதைக்காகத் தான் கதாநாயகன் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்.
அதனால் கேரக்டருக்கு ஏற்றபடி அழகான கதாநாயகனாக இருந்தாலும் அவனை அழுக்கானவனாக மாற்றி விடுவார். சேது, பிதாமகன், பரதேசி போன்ற அவரது முந்தைய படங்களைப் பார்த்தால் தெரியும்.
அருண்விஜய் சிரத்தை: அவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின் ரொம்பவே மெனக்கிட வேண்டும். அதற்காக கடும் சிரத்தை எடுக்க வேண்டிய நிலை கூட ஏற்படும். எதையும் பொருட்படுத்தாமல் நடித்தால் அவர்கள் வெற்றிக்கனியை ருசிக்கலாம். அப்படித்தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அருண்விஜய் இப்போது வெற்றியை சுவைத்திருக்கிறார்.
பாலாவின் படத்தில் நடித்து முடித்துவிட்டு படத்தைத் திரையரங்கில் பார்த்து வெளியே வந்ததும் ரசிகர்களின் உற்சாகத்தைக் கண்டு கண்ணீர் வடித்திருக்கிறார். கஷ்டப்பட்டதுக்குப் பலன் கிடைச்சிடுச்சிப்பான்னு நெகிழ்ந்துள்ளார்.
1.41 கோடி: அவரது தந்தை விஜயகுமாரும் படத்தின் கடைசி காட்சியைப் பார்த்துவிட்டு தொடர்ந்து 10 நிமிடங்களாக அழுது கொண்டே இருந்தாராம். அப்படிப்பட்ட அற்புதமான படமாக வந்துள்ளது இந்த வணங்கான். படத்தின் வசூல் விவரம் என்னன்னு பார்க்கலாமா...
இந்திய அளவில் முதல் நாளில் 0.86 கோடி வரை வசூலித்துள்ளது. 2ம் நாளில் 0.56 கோடி வரை வசூலித்துள்ளது. மொத்த வசூல் விவரம் 1.41 கோடியாக உள்ளது.