Connect with us

கமல் மகள் வயிற்றில் வேலையை செய்திருக்கும் காதலன்!… அவரே வெளியிட்ட புகைப்படம்!…

Cinema News

கமல் மகள் வயிற்றில் வேலையை செய்திருக்கும் காதலன்!… அவரே வெளியிட்ட புகைப்படம்!…

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மிகத் திறமையான மற்றும் அழகான நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணன் படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், கோபிசந்த் மாலினேனி இயக்கும் புதிய படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் ஆவார். சாந்தனுவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் சாந்தனு பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன் பல சர்ச்சைகளை சந்தித்தார். அதாவது பிறந்தநாள் விழாவில் ஸ்ருதிஹாசன் ஆணுறுப்பு வடிவிலான கேக்கை வெட்டி கொண்டாடினார். மேலும் லிப் லாக் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் பல ரசிகர்கள் இவரை துப்பும் அளவிற்கு கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவருடைய காதலன் சாந்தனுவும் பச்சை குத்தியுள்ளார். ஸ்ருதிஹாசனின் வயிற்றில் THUG LIFE என்ற வார்த்தையை வரைந்து சாந்தனு பயிற்சி எடுத்துக் கொள்கிறார் எனவும் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஸ்ருதிஹாசன் மூன்றரை மணி நேரம் செலவழித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் படங்களில் இவ்வளவு பிஸியாக இருக்கும் போதும் தனது காதலனுக்காக இதை செய்துள்ளார். இதனை ஸ்ருதிஹாசன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வரைய இடமே கிடைக்கலையா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top