42 வயசாச்சி..காய்ஞ்சி போயிருக்கேன்!..உல்லாசத்தால் நடுத்தெருவில் நிற்கும் பாய்ஸ் பட நடிகர்...
இயக்குனர் ஷங்கர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை எடுத்து பட இறுதியில் சமுதாயத்திற்கு ஒரு கருத்தை சொல்லக்கூடிய படமாக அவர் எடுத்த ‘பாய்ஸ்’ படம் அமைந்தது. ஏஆர்.ரகுமான் இசையில் பாய்ஸ் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அந்த படத்தில் நடித்த 5 முகங்களான நடிகர் சித்தார்த் பல படங்களில் நடித்தார், நடிகர் நகுல் அவரும் பல படங்களில் நடித்தார். நடிகை ஜெனிலியா முன்னனி நடிகையாகவே திகழ்ந்தார். நடிகர் தமன் இன்று ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருகிறார். நடிகர் பரத் அவரும் சில ஹிட் படங்களை கொடுத்தார். இதில் மற்றுமொரு நடிகராக இருந்தவர் மணிகண்டன். சுருட்டு தலைமுடியுடன் நடனம் ஆடக்கூடிய நடிகராக இருப்பார்.இவரும் ஒரு சில படங்களில் தான் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை ஷகீலா உடனான ஒரு பேட்டியில் நடிகர் மணிகண்டன், ஒரு மலேசியா பெண்ணை நம்பி இருக்கிறதை எல்லாம் இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கும் நிலையில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கூறும் போது ‘42 வயசாச்சிங்க, இன்னும் கல்யாணம் கூட நடக்கல, மிகவும் காய்ஞ்சி போயிருக்கேன், யாராவது கிடைச்சா நல்லா இருக்கும் என்ற மன நிலையில் இருந்தேன்.அப்பொழுது தான் ஒரு பெண்ணுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு ஏற்பட்டது.’
இதையும் படிங்க : ஜெய்யை பாராட்டிய டான்ஸ் மாஸ்டர்… பங்கமாய் கலாய்த்த தளபதி விஜய்… தரமான சம்பவம்…
அவர் மலேசியாவை சேர்ந்தவர். அவருடன் உடலுறவு கொள்ள தான் மலேசியா வரை சென்றேன். ஆனால் ஒரு 4 நாள்களில் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் அபகரித்து கொண்டார். ஒன்றும் இல்லாதவனாய் திரும்பவும் இந்தியா வந்தேன். இதை கூறும் போது நடிகை ஷகீலா குறுக்கீட்டு உடலுறவு கொள்ளதான் போனேன் என்று சொல்கிறவன் ஒரு விலைமாதுவிடம் போயிருக்கலாமே என்று கேட்டதற்கு அதற்கு பதிலளித்த மணிகண்டன் அப்படி போயிருந்தால் உண்மையான அன்பு கிடைச்சிருக்காது என்று கூறினார். என் வீட்டில் திருமணம் செய்து கொள் என்று சொல்லும் போதெல்லாம் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இப்பொழுது தான் அந்த வேதனை எனக்கு புரிகிறது என்று மிகவும் வேதனையுடன் கூறினார் மணிகண்டன். மேலும் அவர் வாழ்வில் 6 பெண்களை காதலித்ததாகவும் அது சரி வரவில்லை எனவும் இப்பொழுது கூட ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாகவும் பல அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் மணிகண்டன்.