ஒளிப்பதிவாளருக்கு ஏழரை சனி…! படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்யராஜ்… என்ன நடந்தது தெரியுமா?
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பி.ஆர்.பந்துலுவின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தான் இயக்கிய முதல் திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் பி.ஆர்.விஜயலட்சுமி.
1985 ஆம் ஆண்டு பாக்யராஜ், கல்பனா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சின்ன வீடு”. இத்திரைப்படத்தை பாக்யராஜ்ஜே இயக்கியிருந்தார். இத்திரைப்படம்தான் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் சில காட்சிகளை படமாக்கியவுடன் அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் திரையிட்டுப் பார்த்திருக்கிறார்கள். அப்போது அந்த காட்சிகள் எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்கு முன் கேமராக்களை எல்லாம் ஒருவரிடம் சர்வீஸ் கொடுத்திருந்தாராம் பி.ஆர்.விஜயலட்சுமி. அப்போது கேமராக்களில் ஏதோ சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது.
ஆதலால்தான் இவ்வாறு அவுட் ஆஃப் ஃபோகஸில் இருந்திருக்கிறது. எனினும் பாக்யராஜ் பி.ஆர்.விஜயலட்சுமியை எதுவும் சொல்லவில்லையாம். அதற்கு மாறாக அவரை ஊக்குவித்து பணியாற்ற வைத்திருக்கிறார்.
இது குறித்து பி.ஆர்.விஜயலட்சுமி அப்பேட்டியில் கூறியபோது, “இதுவே வேறு ஒருவராக இருந்திருந்தால் என்னை நீக்கியிருப்பார்கள். ஆனால் பாக்யராஜ்ஜோ என்னை ஊக்குவித்து பணியாற்றவைத்தார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா?? என்ன இருந்தாலும் அவரும் ஒரு மனுஷன்தானே!