Categories: latest news

நடிகர் ராஜேஷ் காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!…

Actor Rajesh: 1979ம் வருடம் வெளியான கன்னிப்பருவத்திலே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ராஜேஷ். அதன்பின் பல படங்களிலும் நடித்தாலும் அச்சமில்லை அச்சமில்லை, அந்த ஏழு நாட்கள் போன்ற படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. 1949ம் வருடம் மன்னார் குடியில் பிறந்தவர் ராஜேஷ். பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.

பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். அதன்பின் குணச்சித்திர நடிகராக மாறினார். 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். ஜோதிடம், மருத்துவவம் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தவர் இவர். கடந்த ௪௫ வருடங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய புத்தகங்களை படித்த அறிவாளி என இவரை திரையுலகினர் சொல்வார்கள். நடிகர் சிவாஜியின் வெறிப்பிடித்த ரசிகர் இவர். 9 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

பல ஊடகங்களிலும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை மருத்துவர்களிடம் பேசி வந்தவர். கடந்த வருடம் வெளியான மேரி கிறிஸ்துமஸ் என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். சினிமாவில் 4 தலைமுறைகளை பார்த்தவர் இவர். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சென்னையில் ஒரு பள்ளியில் ஆசியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவரின் வயது 75. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிர் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இவரின் மரணத்திற்கு ரசிகர்களும், சினிமா உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago