Categories: latest news

ரஜினியை கட்டிப்பிடித்து அப்படியொரு போஸ்!.. வனிதா விஜயகுமாருக்கு ஒரே சந்தோஷம் தாங்கல!..

Mrs & Mr: தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் விஜயகுமார். இவரின் மகள் வனிதா. வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் 1995ம் வருடம் வெளியானது. அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சின்னு இருக்கு, எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல், அநீதி, ஹரே, தண்டுபாளையம், அந்தகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது தனது மகள் ஜோவிகாவை சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஜோவிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். இப்போது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் (Mrs & Mr) என்கிற படம் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். இந்த படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் வனிதாவின் அம்மா மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை வனிதாவே இயக்கியுள்ளார்.

இந்த படம் தொடர்பான புரமோஷனில் ஈடுபட்டிருக்கும் வனிதா ரஜினியை சந்தித்து ரிலீஸ் தேதியோடு உருவாக்கப்பட்டிருக்கும் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். வனிதாவையும், ஜோவிகாவையும் ரஜினி அன்போடு அரவணைத்து மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

ரஜினியும், விஜயகுமாரும் பல வருட நண்பர்கள். எனவே, வனிதா மீது ரஜினிக்கும் அன்பும், பாசமும் உண்டு. அதனால்தான் இதை வனிதாவுக்காக செய்திருக்கிறார் ரஜினி. Mrs & Mr திரைப்படம் ஒரு ரொமாண்டிக் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். மேலும், ஷகிலா, கிரண் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Published by
சிவா