Suriya HDB: நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. சரவணனாக இருந்த அவர் சினிமாவில் நடிக்க வந்தபோது இயக்குனர் வஸந்த் அவருக்கு சூர்யா என பெயர் வைத்தார். துவக்கத்தில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்தவர் சேது படம் பார்த்துவிட்டு பாலாவிடம் ஓடிப்போய் ‘என்னை வைத்து இப்படி ஒரு படம் இயக்குங்கள்’ என கோரிக்கை வைத்தார். அப்படி சூர்யாவை வைத்து பாலா இயக்கிய படம்தான் நந்தா. இந்த படம் சூர்யா மீது இருந்த சாக்லேட் பாய் இமேஜை உடைத்தது.
அதேபோல், அடுத்தடுத்து வந்த காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்களும் சூர்யாவின் இமேஜை மாற்றியது. அதன்பின் பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சூர்யாவின் புதிய படமான கருப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சூர்யாவின் 50வது பிறந்தநாளான கடந்த 23ம் தேதி இப்படத்தின் டீசர் வீடியோ வெளியானது. டீசரை பார்க்கும் படம் பக்கா கமர்ஷியல் மசாலாவாக உருவாகியிருப்பது தெரிகிறது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. சூர்யா தனது பிறந்தநாளை கோவாவிலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டிலும் 2 நாட்கள் கொண்டாடியிருக்கிறார்.
மேலும் தி.நகரில் உள்ள வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடிவிட வீட்டின் மேலே இருந்து அவர்களுக்கு கைகாட்டி, நன்றி சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவும் வெளியானது. உண்மையில் அவர்கள் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. ரசிகர் மன்றத்தினர் இந்த ஏற்பட்டை செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதோடு, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் இரத்ததானம், அன்னதானம், ஏழைகளுக்கு உதவும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல வேலைகளை செய்திருக்கிறார்கள். இதில், எல்லோரும் நிறையவே செலவு செய்திருக்கிறார்கள். இந்த தகவல் சிவக்குமாருக்கு போக ‘இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுப்பா.. சூர்யாகிட்ட சொல்லி பணத்தை வாங்கி அவங்களுக்கு கொடுத்துடுங்க’ என சொல்லிவிட்டாராம். விரைவில் ரசிகர்கள் செய்த செலவுகள் அவர்களுக்கு சூர்யா தரப்பில் திருப்பி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…