Categories: latest news

40 முறை.. பல லட்சத்திற்கு போ..தைப்பொருள்!.. ஸ்ரீகாந்த் விவகாரத்தில் பகீர்!…

Srikanth: சசி இயக்கிய ரோஜாகூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஸ்ரீகாந்த். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து சொல்லாமலே, பூ, பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறினார். ஆனாலும் அவரால் தொடர் வெற்றியை கொடுக்க முடியவில்லைல்.

எனவே, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. அவ்வப்போது கிடைத்த வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். அப்படியே ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக அமைந்தது.

சில மாதங்களுக்கு முன்பு இவரின் நடிப்பில் தினசரி என்கிற படமும் வெளியானது. மேலும், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்கிற படத்திலும் நடித்தார். இந்நிலையில்தான் போதைப்பொருளான கொக்கைன் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கி சிறைக்கு போயிருக்கிறார்.

பிரதீப் என்பவரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணையில் அவர் ஸ்ரீகாந்துக்கு தொடர்ந்து போ..தைப்பொருளை சப்ளை செய்தது தெரிய வந்திருக்கிறது. போலீசாரின் விசாரணையில் இதை ஸ்ரீகாந்த் மறுத்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர். அதில், அவர் போ..தைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. எனவே, போலீசார் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவரிடம் போலீசார் நடத்திய சோதனையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்திருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே ஸ்ரீகாந்த் போ..தைபொருள் பயன்படுத்தி வந்திருக்கிறார். நுங்கம்பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்று வாங்கியிருக்கிறார். வீட்டில் வைத்தும் அதை பயன்படுத்தியிருக்கிறார்.

இதுவரை 40 முறை சுமார் 4.72 லட்சம் செலவு செய்து வாங்கியிருக்கிறார். அந்த பணத்தை பிரதீப்பின் கூகுள் பே எண்ணில் செலுத்தியிருக்கிறார். மேலும், சில சமயம் சம்பள பாக்கிக்கு பதிலாக பொதைப்பொருளை வாங்கி கொடுக்க சொல்லியிருக்கிறார். ஒருகட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாக மாறிவிட்டார். தற்போது சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஜாமினுக்கு விண்ணப்பித்திருக்கிறார். வெளிநாடு செல்ல மாட்டேன். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

3 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

4 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

4 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

4 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

7 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago