Categories: latest news

கடைசி நாள் ஷூட்டிங்!.. ஜனநாயகன் டீமுக்கு ஷாக் கொடுத்த விஜய்!.. இப்படி ஆகிப்போச்சே!…

Jananayagan: 1992ம் வருடம் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். அதாவது விஜய் சினிமாவில் நடிக்க வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 33 வருடங்களில் எவ்வளவோ அனுபவங்களை, வெற்றி, தோல்விகளை பார்த்துவிட்டார் விஜய். சினிமாவுக்கு நடிக்க வந்து 10 வருடங்களில் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

இவர் நடித்து வெளியான கில்லி படம்தான் தமிழ் சினிமாவில் முதலில் 50 கோடி வசூல் செய்த திரைப்படம். அதன்பின் வசூல் சக்ரவர்த்தியாகவே விஜய் மாறினார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார். கோட் படத்திற்கு 200 கோடியும், இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு 250 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். கடந்த பல வருடங்களாகவே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து ஆலோசனை செய்து வந்த விஜய் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகலாம் என முடிவெடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சி அறிவிக்கப்பட்டு இப்போது அரசியல் வேலைகள் நடந்து வருகிறது. ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்தபின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்டுவார் என சொல்கிறார்கள். அனேகமாக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரவுள்ளது. விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டார் என்கிற நிலையில் கடைசி நாளில் ரசிகர்களையும் வரவழைத்து ஒரு விழா போல ஏற்பாடு செய்து அவரை வழியனுப்பி வைக்கலாம் என ஜனநாயகன் தயாரிப்பாளரும், ஹெச்.வினோத்தும் முடிவு செய்தார்களாம். இதை விஜயிடம் சொன்னபோது இதை வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

‘என் சினிமா கெரியரில் கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் எமோஷனலாக இருப்பேன். இதுபோன்ற நிகழ்ச்சி நடந்தால் நான் மேலும் எமோஷனல் ஆகிவிடுவேன். அது சரியாக இருக்காது. வழக்கம்போல் ஷூட்டிங் முடிந்து செல்வது போல நான் போய்விடுகிறேன்’ என சொல்லிவிட்டாராம் விஜய்.

Published by
சிவா