கூலி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு சூப்பர் ரோல்!.. செம டிவிஸ்ட்டும் இருக்காம்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Coolie movie: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானதோடு பெரிய இயக்குனர்களின் லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் படங்களுக்கென்றே பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியிருக்கிறது. ஏனெனில் அவரின் கதை சொல்லும் பாணிதான்.

மாநகரம், கைதி இரு படங்களுமே ஒரு இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி இருந்தார். அதேபோல், போதைப்பொருள் கடத்தலை அடிப்படையாக கொண்டே எல்லா படங்களையும் லோகேஷ் உருவாக்குகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. அதேநேரம் அவர் கதை சொல்லும் விதம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அவரின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவரின் அடுத்த படத்திலும் வருவதை ரசிகர்கள் LCU என அழைக்கிறார்கள். அதாவது லோகேஷ் சினிமா யூனிவர்ஸ் என்கிறார்கள். பரபரக்கும் ஆக்‌ஷன் கதையை சஸ்பென்ஸாக இயக்குவது லோகேஷுக்கு நன்றாகவே வருகிறது. எனவே, அதையே தனது ஸ்டைலாக வைத்திருக்கிறார்.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்த படத்தில் சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா மற்றும் நாகார்ஜுனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். வழக்கமாக போதை மருந்து கடத்தலை காட்டும் லோகேஷ் இந்த படத்தில் எதை காட்டப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் இதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் கூலி படத்தில் ஸ்ருதி ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்றார்கள். இப்போது அவர் சத்யராஜின் மகள் என செய்தி அடிபடுகிறது.

அதோடு, படத்தின் கிளைமேக்ஸில் பெரிய டிவிஸ்ட்டும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை சத்யராஜின் மகள் போல காட்டிவிட்டு கிளைமேக்ஸில் ரஜினியின் மகள் என காட்டுவார்களா என்பது தெரியவில்லை. ஒருபக்கம், தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதி பாடிய ‘விண்வெளி நாயகா’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment