Soundarya rajinikanth: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. அப்பாவின் தீவிர ரசிகையான இவருக்கு சினிமா தயாரிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், இதுவரை அவர் தொட்டது எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதோடு, கதை, திரைக்கதை எழுதி படம் இயக்குவதிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. அப்பா ரஜினியை வித்தியாசமாக காட்டுகிறேன் என சொல்லி ரஜினியை அனிமேஷனில் காட்டி கோச்சடையான் படம் எடுத்தார்.
ரஜினியை அனிமேஷனில் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. எனவே இப்படம் தோல்வி அடைந்தது. அதோடு, இந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் சவுந்தர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தங்களுக்கு கொடுக்கவேண்டிய சில கோடிகளை சவுந்தர்யா கொடுக்கவில்லை என அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு பல வருடங்கள் நடந்தது.
கிராபிக் டிசைனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்தாலும் சவுந்தர்யாவுக்கு ஏனோ சினிமாவில் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு வெற்றி கிடைக்கவில்லை. படையப்பா, பாபா, சந்திரமுகி, சண்டக்கோழி, சிவாஜி உள்ளிட்ட சில படங்களுக்கு டைட்டில் டிசைன் செய்து கொடுத்தவர் இவர்தான். வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
இப்போது மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து ‘கேங்க்ஸ்’ எனும் வெப் சீரியசை தயாரித்தார். அசோக் செல்வன் நடித்த இந்த வெப் சீரியஸை நோவா ஆபிரகாம் என்பவர் இயக்கினார். ஷூட்டிங் 75 சதவீதம் முடிந்தநிலையில் இயக்குனருக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே முட்டிக்கொள்ள இனிமேல் நான் இயக்க மாட்டேன் என இயக்குனர் சொல்லிவிட்டார். எனவே, அந்த வெப்சீரியஸை மூட்டை கட்டி போட்டுவிட்டார்கள்.
அந்த பஞ்சாயத்தை தீர்க்காமல் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வேறொரு வெப் சீரியஸை தயாரிக்க போய்விட்டார் சவுந்தர்யா. பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த வெப் சீரியஸில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதனால் கடுப்பான அமேசான் பிரைம் நிறுவனம் தங்களின் வெப் சீரியஸை அப்படியே விட்டு போனதற்காக சவுந்தர்யா மீது வழக்கு தொடர தயாராகி வருகிறது. ரஜினி மகள்கள் எதை தொட்டாலும் அது பஞ்சாயத்திலேயே முடிகிறது என சொல்லி சிரிக்கிறார்கள் சினிமா உலகினர்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…