Categories: latest news

அவதார் 3 புது போஸ்டர் தீயா இருக்கு!.. அட ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாங்களே!…

Avatar Fire and Ash: ஹாலிவுட்டில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் ஜேம்ஸ் கேமரூன். ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக் போன்ற முக்கிய படங்களை இயக்கிவர் இவர். உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் எடுத்தால் அது இவரின் படங்களாகவே இருக்கும். அந்த வரிசையில் முதலில் இருந்தது டைட்டானிக். அதன்பின் அந்த இடத்திற்கு அவரின் அவதார் படம் வந்தது.

இப்போதும் நம்பர் ஒன் வசூலில் அந்த படமே இருக்கிறது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ம் வருடம் வெளியானது. பண்டோரா என்கிற இடத்தைக் கைப்பற்ற நினைக்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். பண்டோராவில் வசிக்கும் நாவி என்கிற இனத்திடம் பேசி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக ஹீரோவை அனுப்புவார்கள்.

ஆனால், அங்கு செல்லும் ஹீரோ அவர்களில் ஒருவராக மாறி கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து சண்டை போடுவதுதான் படத்தின் கதை. இது தமிழிலும், மலையாளத்திலும் எப்போதோ வந்த வியட்நாம் காலணியின் கதைதான் என்றாலும் ஜேம்ஸ் கேமரூன் இதை கையாண்ட விதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதுவரை பார்க்காத ஒரு உலகத்தை ரசிகர்களுக்கு காட்டியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022ம் வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. தண்ணீரில் கதை நடப்பது போல காட்டியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். அடுத்த பாகாம் Avatar Fire and Ash என நெருப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில், ஒரு புது போஸ்டரை வெளியிட்டதோடு வருகிற டிசம்பர் மாதம் 19ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இது அவதாரின் 3வது பாகமாக வெளியாகவுள்ள நிலையில் இன்னும் 2 பாகங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா