Dhanush Kubera: சினிமா உலகில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தனுஷ். இவரை சுற்றி எப்போதும் பரபரப்பான செய்திகள் இருக்கும். இளம் நடிகர், நடிகைகள் தங்களின் திருமண வாழ்வை முறித்துக்கொண்டால் தனுஷின் பெயர் அடிபடும். சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் ‘நான்தான் இவனை தூக்கிவிட்டேன் என என்னை சிலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்’ என பேசியது தனுஷை மனதில் வைத்துதான் என சொல்லப்பட்டது.
ஒருபக்கம் நடிகை நயன்தாரா தனுஷை மிகவும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். உங்கள் அப்பா, அண்ணன் இல்லையென்றால் உங்களுக்கு அடையாளமே இல்லை’ என திட்டினார். ஆனால், அப்போது தனுஷ் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஜிவி பிரகாஷ் விவகாரத்துக்கு போன போதும் தனுஷின் பெயர் அடிபட்டது. பாடகி சுசித்ரா தனுஷ் பற்றி பல பகீர் தகவல்களை சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் சேர்த்துதான் குபேரா பட புரமோஷன் மேடைகளில் தனுஷ் தனது கோபத்தை காட்டி வருகிறார். இது கலி காலம். வெறுப்பு ஓங்கி நிற்கும் காலம். தம்பிங்களா!.. கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க. என்னை காலி பண்ணனும்னு நெனச்சா ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது. தீப்பந்தம் போல் என் ரசிகர்கள் இருக்கும்வரை நான் மேல போய்க்கிட்டே இருப்பேன்’ என அதிரடியாக பன்ச் பேசியிருக்கிறார். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் தனுஷின் பேச்சை நக்கலடித்து பதிவிட்டிருக்கிறார்.
யாரை சொல்றாரு? எதுக்கு சொல்றாருன்னு யாருக்கும் புரியவில்லை. நயன்தாராவை சொல்றதா ஒரு குரூப் சொல்லுது. திடீர் தளபதியை (சிவகார்த்திகேயன்) திட்றாருன்னு இன்னொரு குரூப் சொல்லுது. இந்த நடிகர்களுக்கு வெளிப்படையாக பேசும் தைரியமே இல்லை. பேசாம இருக்கவும் முடியவில்லை. ஒரே தமாசுதான். ஆடியோ, டிரைய்லர் ரிலீஸ் விழாக்களை இப்படி ரசிகர் மன்ற கூட்டமா மாத்துறதே பலருக்கும் வேலையா போச்சி. இது மாதிரி Pre Release பஞ்ச் எல்லாம் படம் வந்ததும் ட்ரோல் பண்ணத்தான் யூஸ் ஆகும்.
படத்தை ஒழுங்கா எடுத்தா அதை மக்களே பாராட்டுவாங்க.. இப்படி பேசுறதெல்லாம் பயங்கர கிரின்ச் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பது கூட இன்னும் இவங்களுக்கு தெரியலையா?.. இல்லன்னா தெரிஞ்சும் இப்படி பேசி இருக்கும் ரசிகர்களை ரசிக மனோபாவ மாய வலையை விட்டு வெளிய வராம பாத்துக்குறாங்களா?..
படத்தில் பொழுதுபோக்கு இல்லன்னாலும் இந்த மாதிரி ஃப்ரி ரிலீஸ் நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பேசும் பேச்சுகள் செம காமெடியா இருக்குடாப்பா. தனுஷோட மேடை மேனரிசம், பேசும் ஸ்டைல் எல்லாம் தலீவர் (ரஜினி) பாணியில் இருப்பது மக்களுக்கு ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட்’ என கலாய்த்திருக்கிறார் மாறன்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…