கோலிவுட்டில் ஃபர்ஸ்ட் தமிழ் படம்!.. எப்பவும் நான்தான் கிங்!.. கூலி பிஸ்னஸில் கெத்துகாட்டும் ரஜினி!….

Published on: August 8, 2025
---Advertisement---

Coolie business: சினிமா உலகில் சில படங்களுக்கு மட்டுமே அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்படும். அதற்கு இயக்குனர் – நடிகர் காம்போ முக்கிய காரணமாக அமையும், 38 வருடங்களுக்கு பின்னர் மணிரத்னமும், கமலும் மீண்டும் தக் லைப் படத்திற்காக இணைந்தபோது அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல், லோகேஷ் கனகராஜுடன் ரஜினி இணைந்திருப்பதால் கூலி படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

லோகேஷின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் கதை சொல்லும் விதமும், அதை படமாக்கும் விதமும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. போதைப்பொருள் மாஃபியா, ஒரே நாளில் நடக்கும் கதை, அதில் எல்.சி.யூ, பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பது என ஒரு இருண்ட உலகை லோகேஷ் காட்டுகிறார்.

அதோடு இவரின் படங்களில் ஹீரோக்களுக்கு பக்கா ஆக்‌ஷன் காட்சிகள் கலந்த ஹீரோயிசம் அதிகமாகவே இருக்கும். ஏற்கனவே ஹீரோயிசத்தில் உச்சம் தொட்டவர் ரஜினி. இப்போது இருவரும் இணைந்திருப்பதால் கூலி படத்தின் மீது பெரிய ஹைப் உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அதோடு, இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யாராஜ், அமீர்கான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அதாவது பேன் இண்டியா அளவில் 1000 கோடி வசூலை அள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்திருக்கிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சிகிட்டு பாடலும் யுடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. ஒருபக்கம், கூலி படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது. இப்படத்தின் தமிழக, ஆந்திர, கர்நாடக மற்றும் வட மாநில ரிலீஸ் உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. மேலும், சேட்டிலைட், ஓடிடி என எல்லாம் சேர்த்தால் ரிலீஸுக்கு முன்பே இப்படம் 500 கோடி லாபத்தை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க 6 பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டது. அதில் ஒரு நிறுவனம் மிகவும் அதிக விலை கொடுத்து கூலி படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு விலைக்கு போனதில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இப்படத்தின் உரிமைகளை யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள் என ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்பும் வெளியாகவுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment