Categories: latest news

காசுக்கு ஆசைப்பட்டு டைட்டில் போயிடுச்சே!.. கூலி தலைப்பையே மாத்திட்டாங்களே!..

Coolie: லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் கூலி. இந்த படத்தில் ரஜினியோடு சேர்ந்து நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதில், நாகர்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். லோகேஷின் ஸ்டைலில் கூலி படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே லோகேஷின் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அவர் இயக்கிய படங்கள் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அதுவும், அவரின் படங்களை எல்.சி,யூ என ரசிகர்கள் சொல்கிறார்கள்.

ஜெயிலர் பட மெகா ஹிட்டுக்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை அனிருத்தும், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை பார்க்க ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கூலி படத்தில் சில நிமிடங்கள் வரும் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் நடித்திருக்கிறார்.

அமீர்கானை வைத்து ஹிந்தியிலும் கல்லா கட்ட முடிவெடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால், ஹிந்தியில் கூலி என்கிற தலைப்போடு படம் வெளியாவதில் சிக்கல் எழுந்திருக்கிறது. ஏனெனில், அமிதாப்பச்சன் நடிப்பில் கூலி என்கிற படம் 1983ம் வருடம் வெளியானது. அதேபோல், கூலி நம்பர் ஒன் என்கிற படம் 2020ம் வருடம் வெளியானது. எனவே, ஹிந்தியில் மட்டும் கூலை தலைப்பை மாற்றி மஜதூர் (Majadoor) என மாற்றிவிட்டார்கள்.

Published by
சிவா