Categories: latest news

ஹாலிவுட் ரேஞ்சுல அதிருதே!.. AA26 பட ஹீரோயின் இவர்தான்!.. தெறி வீடியோ!…

AA26 : ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் சினிமா கற்றவர் என்பதால் அவரைப்போலவே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுப்பவர். விஜயை வைத்து தெறி, மெர்சல், பீஸ்ட் படங்களை எடுத்தவர். விஜயை வைத்து 3 படங்களை இயக்கியதால் பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார்.

எனவே, பாலிவுட் நடிகர் ஷாருக்கான அவரை அழைத்து அவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அப்படி உருவான ஜவான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. உலகம் முழுவதும் இப்படம் 1300 கோடி வசூலை பெற்றது. எனவே, அட்லியின் இயக்கத்தில் நடிக்க சல்மான்கான் போன்ற பாலிவுட் நடிகர்களே ஆசைப்பட்டார்கள்.

ஜவானுக்கு பின் அட்லி யாரை வைத்து படமெடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போதுதான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்க புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூன் நடிக்க ஒரு புதிய படம் உருவாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பை ஒரு அசத்தலான வீடியோவாக வெளியிட்டார்கள்.

இந்த படத்திற்காக அமெரிக்கா சென்று ஹாலிவுட் கலைஞர்களிடம் அட்லியும், அல்லு அர்ஜூனும் உரையாடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தின் கதையையே ஹாலிவுட் கதாசிரியர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் அட்லி. எனவே, ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் அசத்தலாக வரும் என்றே கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரிடம் அட்லி காட்சிகளை விளக்கும் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதைப்பார்க்கும் போது அட்லி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போகிறார் என்பது புரிகிறது. இந்த படத்தில் தீபிகா மட்டுமில்லாமல் மேலும் சில நடிகைகளும் நடிக்கவுள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றியும் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago