அங்க தொட்டு இங்க தொட்டு குருவுக்கு ஆப்பு வைத்த அட்லி!.. ஷங்கர் வேள்பாரிய எடுத்த மாதிரிதான்!..

Published on: August 8, 2025
---Advertisement---

AA26: சினிமாவில் காப்பி என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. 1950,60களில் வெளியான பல எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் பல ஆங்கில படங்களின் தழுவல்களாகவும், ஆங்கில நாவல்களையும் அடிப்படையாக கொண்டும் உருவாக்கப்பட்டது. 1961ம் வருடம் ஹாலிவுட்டில் வெளிவந்த Come September என்கிற படத்தை காப்பி அடித்துதான் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தை எடுத்தார்கள். அப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லை என்பதால் இது வெளியே தெரியாது. மேலும், காப்புரிமை கேட்டு ஹாலிவுட் நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்தது இல்லை.

ஆனால், இப்போதெல்லாம் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் எல்லாமே வெளியே தெரிந்துவிடுகிறது. ஆங்கில படங்களின் கதை, காட்சி, போஸ்டர் டிசைன் முதல் கொண்டு சிலர் காப்பி அடித்து தமிழில் பயன்படுத்தப்படுவது உண்டு. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கூட ஹாலிவுட்டில் வெளிவந்த A History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என சொல்லலாம். தெரிந்தது இவ்வளவு என்றால் தெரியாமல் நிறைய இருக்கிறது.

மற்ற மொழிகளில் இருந்து அடிப்பது ஒரு ஸ்டைல் எனில் ஏற்கனவே தமிழில் ஹிட் அடித்த படங்களின் கதையை உல்டா செய்து படமெடுப்பது ஒரு ஸ்டைல். இதை பின்பற்றி வருபவர்தான் இயக்குனர் அட்லி. மௌன ராகத்தை வைத்து ராஜா ராணி, சத்ரியனை வைத்து தெறி, அபூர்வ சகோதரர்களை வைத்து மெர்சல், ஷாருக்கானின் சக்தே படத்தை வைத்து பிகில் என கலந்துகட்டி அடித்தவர் இவர்.

ஆனால், இதையெல்லாம் அவர் எப்போதும் ஒப்புக்கொண்டதே இல்லை. என்னை அப்படி விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதையெல்லாம் நான் கண்டுகொள்வது இல்லை என சொல்கிறார். பிகில் படத்திற்கு பின் ஷாருக்கானை வைத்து ஜவான்படமெடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இப்போது அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக ஹாலிவுட் கலைஞர்களுடன் கை கோர்த்திருக்கிறார் அட்லி. படத்தின் கதையையே ஒரு ஆங்கில கதாசிரியருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்கவுள்ளது. இந்த படத்தின் பாதி காட்சிகள் தற்போது நடப்பது போலவும், மீது காட்சிகள் சரித்திர பின்னணியிலும் எடுக்கப்படவுள்ளதாம். இந்நிலையில், ஷங்கர் எடுக்க நினைத்த வேள்பாரி நாவலில் இருந்து கொஞ்சம் சுட்டுதான் அட்லி இந்த படத்தை எடுக்கப்போகிறார் என்கிற தகவலும் வெளியே கசிந்திருக்கிறது. வேள்பாரி நாவலை படமாக எடுக்கும் உரிமை அட்லியின் குருவான ஷங்கரிடமே இருக்கிறது. ஏற்கனவே சிலர் சில காட்சிகள் அதிலிருந்து சுட்டு எடுத்துவிட்டார்கள். அப்படி செய்ய வேண்டும் என ஷங்கரே கோரிக்கையும் வைத்தார். இப்போது அவரின் சிஷ்யர் அட்லியே இந்த வேலையை செய்திருக்கிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment