Categories: latest news

ரஜினியை நம்பி தனுஷ் படம் போச்சே!.. ஹெச்.வினோத் என்ன பண்ணப் போறாரு?!…

Rajinikanth: பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஹெச்.வினோத். நட்டி நடராஜை ஹீரோவாக போட்டு இவர் இயக்கிய சதுரங்க வேட்டை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மக்களிடம் ஒரு குரூப் எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது.

அதன்பின் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இதுதான் ஹெச்.வினோத் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டியது. ராஜஸ்தான், பீகார் பகுதிகளிலிருந்து கொள்ளையர்கள் தமிழகம் வந்து எப்படி மக்களை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என இப்படத்தில் விரிவாக காட்டியிருந்தார். அதற்காக ஒரு வருடம் பல மாநிலங்களுக்கும் சென்று அதுபற்றிய தகவல்களை சேகரித்தார்.

ஏனெனில், அடிப்படையில் ஹெச்.வினோத் பத்திரிக்கையாளர். விகடனில் வேலை செய்திருக்கிறார். அடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என 3 படங்களை தொடர்ந்து இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். இதனால் விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்தது.

துணிவு படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து ஹெச்.வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால், விஜய் பட வாய்ப்பு வந்ததும் அங்கு போனார். இப்போது விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாகவும் ஜெயிலர் 2-வுக்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ரஜினி நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால், அதில் இப்போது மாற்றம் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் ரஜினி படத்தை இயக்கவில்லை. ஒருவேளை ஹெச்.வினோத் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். எனவே, அடுத்து தனுஷ் படம்தான் எகிற முடிவுக்கு வந்துவிட்டார் ஹெச்.வினோத். ஆனால், தனுஷோ கையில் தொடர்ச்சியாக படங்களை வைத்திருக்கிறார்.

எனவே, தனுஷ் படம் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புண்டு எனவும், அதுவரை எந்த டென்ஷனும் இல்லாமல் ஹெச்.வினோத் கூலாக இருப்பார் எனவும் சொல்கிறார்கள். ஏனெனில், ஒரு படத்தை முடித்தவுடன் உடனே அடுத்த படத்தை வேகமாக துவங்கும் பழக்கம் ஹெச்.வினோதுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா