ரிலீசானது ஒரு படம்!. ஆனா கயாடு லோஹர் கேட்கும் சம்பளம்!.. அம்மணி செம உஷாரு!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kayadu lohar: சில நடிகைகள் திடீரென பிரபலாகிவிடுவார்கள். ஒரே ஒரு புகைப்படம் சிலரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திவிடும். மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்கள் வெளியாகி வைரலான போதுதான் ரம்யா பாண்டியன் பிரபலமானார். பிரியா வாரியர் ஒரு படத்தில் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமாகி இப்போது வரை கல்லா கட்டி வருகிறார்.

அப்படி திடீரென பிரபலமானவர்தான் கயாடு லோஹர். இவர் புனேவை சேர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் நிறைய அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டவர். ஒரு கன்னட படத்தில் அறிமுகமாகி அப்படியே தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் அறிமுகமானர். பட ரிலீஸுக்கு முன்பே கயாடு லோஹரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு ஓவர் நைட்டில் பிரபலமடைந்தார். டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு போனாலும் கயாடு லோஹரின் புகைப்படங்கள் கண்ணில் பட்டது.

இதைப்பார்த்து நெகிழ்ந்து போன கயாடு லோஹர் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ போட்டார். டிராகன் படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. எனவே வெற்றிப்பட கதாநாயகி என்கிற இமேஜோடு வலம் வருகிறார் கயாடு லோஹர். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை புரிந்துகொண்ட காயடு லோஹர் பல படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

குட் நைட் இயக்குனர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம், அதர்வாவுடன் இதயம் முரளி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும், சில படங்களில் நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். தனக்கு மார்கெட் இருப்பதை புரிந்துகொண்ட கயாடு ஒரு படத்தில் நடிக்க ஒன்றரை கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment