Categories: latest news

மிரட்டிய ஓடிடி நிறுவனம்!.. தனுஷ் படத்துக்கு வந்த சோதனை!.. குபேரா ஹிட் அடிக்குமா?!…

Kuberaa: தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள திரைப்படம் குபேரா. ஆந்திரா திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் இவர். இதற்கு முன் இயக்கிய படங்கள் கவனத்தை பெற்றன. குபேரா படம் ஒரு சோஷியல் டிராமாவாக உருவாகி இருக்கிறது. மும்பையில் கதை நடப்பது போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

இட்லி கடை படத்தை முடித்துவிட்டு தனுஷ் இந்த படத்திற்கு போனார். குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் பல பாலிவுட் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். அதிலும், ஜிம் சார்ப் என்பவர் வில்லனாக நடித்திருக்கிறார். தனுஷுன் தோற்றமே படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. அதில், தனுஷ், நாகார்ஜுனா ஆகியோர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. வருகிற 20ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் மொத்த நீளம் 3.15 மணி நேரம் இருக்கிறதாம். 2.30 மணி நேரத்திற்கு மேலே போனாலே ரசிகர்கள் பொறுமை இழப்பார்கள். 3.15 மணி நேரம் என்றால் ரசிகர்கள் என்னவார்கள் என்பது தெரியவில்லை. இந்த படம் ஜூலை மாதம்தான் ரிலீஸ் என்றே நினைத்தே இயக்குனர் வேலை பார்த்திருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் ஓடிடி நிறுவனங்கள்தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்கின்றன.

இந்த படத்தை அமேசான் நிறுவனம் 47 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. இன்னும் 10 நாட்கள் கொடுத்தால் படத்தின் நீளத்தை குறைக்கிறேன் என இயக்குனர் சொல்லியும் தயாரிப்பாளர் கேட்கவில்லை. ஏனெனில், அமேசான் நிறுவனம் இதை ஏற்கவில்லை. ஜூன் 20 ரிலீஸ் இல்லையெனில் சொன்ன விலையில் 10 கோடியை குறைத்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.

எனவே, 3.15 மணி நேரத்தோடு வருகிற 20ம் தேதி குபேரா படம் 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. அமேசான் நிறுவனம் இப்படி சொல்லிவிட்டதால் நாகார்ஜூனின் மகன் திருமணம் நடந்த அதேநாளில் அவரை கூப்பிட்டு டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா