சூர்யாவுக்கு ஆப்பு வைக்கும் அண்ணாச்சி!.. கங்குவா கதைதான் கருப்பு-க்கு நடக்குமா?…

Published on: August 8, 2025
---Advertisement---

Karuppu movie: சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன். இவரை லெஜெண்ட் சரவணா என கூப்பிடுகிறார்கள். துவக்கத்தில் தனது துணிக்கடை தொடர்பான விளம்பர படங்களில் நடித்தார். தமன்னா, ஹன்சிகா போன்றவர்களுடன் நடமும் ஆடினார். எனவே, இவர் சினிமாவில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள்.

நினைத்தது போலவே சினிமாவுக்கு வந்தார் அண்ணாச்சி. தன்னுடன் ஜோடியாக நடிக்க நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா என பலரையும் கேட்டார். ஆனால், அவர்கள் மறுத்துவிடவே மும்பையிலிருந்து ஒரு நடிகையை கொண்டு வந்தார்கள். லெஜெண்ட் என்கிற தலைப்பிலேயே இப்படம் வெளியானது. விளம்பர படங்களை எடுக்கும் ஜெடி ஜெர்ரி இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தனர்.

இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, இனிமேல் நடித்தால் அது சூப்பர் ஹிட் படமாக அமையவேண்டும் என நினைத்த அண்ணாச்சி 3 வருடங்கள் நேரம் எடுத்து இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஒரு போஸ்டரை தவிர படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த லெஜெண்ட் சரவணா ‘இந்த படம் கிரைம் திரில்லர் ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம். இந்த வருடம் தீபாவளி நம்ம தீபாவளி’ என சொல்லியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கருப்பு படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை திட்டமிட்டபோது ரஜினி தனது வேட்டையன் படத்தை அதே தேதியில் ரிலீஸ் செய்ததால் கங்குவா ரிலீஸ் தள்ளிப்போனது. படமும் தோல்வியையும் தழுவியது. இப்போது போட்டிக்கு அண்ணாச்சி வருகிறார். எனவே, கருப்பை திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியிடுவார்களா? இல்லை ரிலீஸ் தள்ளிப்போகுமா? என ரசிகர்கள் நக்கலடிக்க துவங்கிவிட்டார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment