Connect with us

அந்த ஹீரோவுக்கு ரூட்டு போடும் மணிரத்னம்!.. ஓகே சொல்வாரா?.. எஸ்கேப் ஆவாரா?!..

latest news

அந்த ஹீரோவுக்கு ரூட்டு போடும் மணிரத்னம்!.. ஓகே சொல்வாரா?.. எஸ்கேப் ஆவாரா?!..

Manirathnam: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். மௌன ராகம், ரோஜா, பம்பாய், அஞ்சலி, நாயகன், தளபதி என தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கியவர் இவர். இவரின் இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர், நடிகைகளும் ஆசைப்படுவார்கள். இவர் படத்தில் நடிப்பதென்றால் சம்பளத்தை கூட குறைத்து வாங்கிக்கொள்வார்கள்.

ஏனெனில் மணிரத்னம் என்கிற இயக்குனர் மீதிருக்கும் இமேஜ். மொக்கையான கதைகளையோ, மொக்கையான காட்சிகளையோ, கிரின்ச் காட்சிகளையோ தனது படங்களில் மணிரத்னம் வைக்கமாட்டார். ஒரு படத்திற்கு என்ன தேவையோ அதை ரத்ன சுருக்கமாக வைத்திருப்பார். அதேபோல், இவரின் படங்களில் வசனங்களும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

விஸ்வல் மூலம் அழகாக கதை சொல்வார். பெரும்பாலும் கேங்ஸ்டர்.. இல்லையென்றால் காதல்.. இந்த இரண்டு வகை படங்களை மட்டுமே எடுப்பார். அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே, ஓகே கண்மணி என ரசிகர்களை கவர்ந்தவர். எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை பலரும் முயற்சி எடுத்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்து வெற்றிபெற்றும் காட்டினார்.

ஆனால், நாயகனுக்கு பின் 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் இணைந்து உருவான தக் லைப் படம் ரசிகர்களை கவரவில்லை. கமலும், மணிரத்னமும் இணைந்து இப்படத்தின் கதையை உருவாக்கி இருந்தார்கள். ஆனால், மணிரத்னம் அமைத்த திரைக்கதை ஏனோ ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்த படத்திற்கு பின் சிம்புவை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், தக் லைப் ரிசல்ட் காரணமாக அது நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதோடு, சிம்புவும் வெற்றிமாறன் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. எனவே, புதுமுக நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.

இந்நிலையில், மணிரத்னம் அலுவகத்திலிருந்து மலையாள நடிகர் பிருத்திவிராஜை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் அவருக்கு முக்கிய வேடமா இல்லை அவரை வைத்து ஏதேனும் ஒரு படத்தை மணிரத்னம் இயக்கப்போகிறாரா என்பது அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரியவரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top