Categories: latest news

அது லோகேஷ்தான் பண்ண முடியும்!. என்னால முடியாது!.. மணிரத்னம் சொன்னது என்ன?…

Manirathnam: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். போதை மருந்து கடத்தில் பின்னணியிலேயே அவர் கதை, திரைக்கதை அமைக்கிறார். சென்னை போன்ற பெரு நகரங்களின் இருண்ட உலகத்தை அவர் காட்டுகிறார்.

இதனாலேயே அவரின் படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. லோகேஷ் கனகராஜ் எடுக்கும் படங்களை ரசிகர்கள் லோகீ யூனிவர்ஸ் என அழைக்கிறார்கள். மேலும், அவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் அவரின் அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக வருவதை எல்.சி.யூ (லோகி சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்றும் சொல்கிறார்கள்.

எனவே, அவர் எப்போது புது படத்தை துவங்கினாலும் ‘இதில் எல்.சி.யூ இருக்கா?’ என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. கைதி படத்தில் வரும் கதாபாத்திரங்கள் விக்ரம் மற்றும் லியோ படங்களில் வந்தது. விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு படம் எடுப்பதாக சொல்லி சூர்யா ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருக்கிறார் லோகேஷ்.

லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எல்.சி.யூ என எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க புதிய கதை என சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகார்ஜூனா போன்ற நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.

ஒருபக்கம் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள தக் லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் வேலைகளில் கமல், மணிரத்னம், திரிஷா, சிம்பு ஆகியோர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மணிரத்னத்திடம் ‘லோகேஷ் யூனிவர்ஸ் போல மணிரத்னம் யூனிவர்ஸ் வருமா?’ என கேட்டபோது ‘ஒரு படம் எடுப்பதற்கே கடினமாக இருக்கிறது. யூனிவர்ஸ் எடுப்பதற்கு லோகேஷ் கனகராஜ்தான் சரியான ஆள்’ என சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago