Categories: latest news

குபேராவா?.. கூலியா?!.. கன்பியூஸ் ஆன நாகார்ஜுனா !.. அப்செட் அன தனுஷ் .

Kubera Coolie: தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு நன்றாகவே பரிட்சயம் ஆனவர் நாஜார்ஜுனா. ஏனெனில், உதயம், இதயத்தை துள்ளாதே, ரட்சகன், தோழா போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். எனவே, தமிழ் நன்றாகவே பேசுவார். மேலும், சமந்தாவின் முன்னள் மாமனார் இவர். அந்த வகையிலும் இவர் கோலிவுட் ரசிகர்களுக்கு நெருக்கமானவர்தான்.

இப்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் ஒரு நல்ல இயக்குனராக பார்க்கப்படுபவர். குபேரா ஒரு சோஷியல் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

எனவே, படக்குழு தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டிருக்கிறது. மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் படக்குழு ரசிகர்களை சந்தித்து பேசியது. இதில், தனுஷ் தன்னை பற்றி மோசமாக விமர்சைப்பவர்கள் பற்றி பேசினார். என் ரசிகர்கள் இருக்கும்வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என பன்ச் வசனமெல்லாம் பேசினார்.

ஒருபக்கம், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார் என்பதான் இப்போது ஹாட் டாப்பிக். லோகேஷுக்கும், ரஜினிக்கும் அதிக ரசிகர்கள் என்பதால் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான். குபேரா பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாகார்ஜுனாவிடம் கூலி பற்றிய கேள்விகளே அதிகம் கேட்கப்படுகிறது.

எந்த யுடியூப்பிற்கு அவர் பேட்டி கொடுத்தாலும் கூலி படம் பற்றிய அதிக கேள்விகள் கேட்கிறார்கள். அவரும் முடிந்த அளவுக்கு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவிலும் கூலி பற்றி நிறைய பேசினார். அப்போது தனுஷின் முகமே மாறியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. மொத்தத்தில் குபேரா பட புரமோஷனை நாகார்ஜுனா கூலி பட புரமோஷனாக மாற்றிவிட்டார். இதில் தனுஷே கொஞ்சம் அப்செட் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Published by
சிவா