Categories: latest news

நெட்பிளிக்ஸை கவுத்துவிட்ட 3 படங்கள்!.. சூர்யா படத்துக்கு வந்த ஆப்பு!. மொத்த பிஸ்னஸும் போச்சே!…

Netflix: ஓடிடி உரிமை என்பது இப்போது திரைப்படங்களின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கிடைக்கும் லாபத்தை வைத்தே படங்களின் பட்ஜெட்டையும், நடிகர்களின் சம்பளத்தையும் தயாரிப்பாளர்கள் தீர்மானிக்கிறார்கள். லாக்டவுனில் தியேட்டர்கள் மூடப்பட்டபோது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியையே ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கிறார்கள். ஓடிடி உரிமை விற்கப்படாததால்தான் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பொட்டியில் தூங்கி வருகின்றன. ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்குகிறார்கள். படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுகிறர்கள்.

தியேட்டரில் பார்க்காதவர்கள் ஒடிடியில் பார்க்கிறார்கள். தியேட்டரில் வரவேற்பை பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் வரவேற்பை பெறுவது அவ்வப்போது நடக்கும். ஒருபக்கம், முன்பெல்லாம் பல கோடிகள் கொடுத்து விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்கியது. ஆனால், சில படங்களால் முதலீடு செய்த கூட பணம் கூட வராமல் நஷ்டமடைந்தன.

எனவே, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய படங்களுக்கு கொடுக்கும் விலைகளை குறைத்துவிட்டார்கள். அதோடு, பல படங்களை வாங்கவும் இல்லை. மேலும், ஒரு வருடத்திற்கு தேவையான படங்களை வாங்கிவிட்டதாலும் புதிய படங்களை வாங்க முடியாத நிலையும் இருக்கிறது. இதனால், சில பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருக்கிறார்கள். பறந்து போ, சர்தார் 2, ஜெயம் ரவியின் ஜீனி போன்ற படங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்களை வாங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விடாமுயற்சி, ரெட்ரோ, தக் லைப் போன்ற படங்களை வாங்கி நஷ்டமடைந்திருக்கிறது. எனவேதான் சூர்யாவின் கருப்பு, சர்தார் 2 போன்ற படங்களை அந்நிறுவனம் இன்னமும் வாங்கவில்லை. கருப்பு படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எப்படியும் ஓடிடி விற்றுவிடும் என்கிற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.

Published by
சிவா