Connect with us

சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி பட டைட்டில் இதுதான்!.. வேணாம்னு சொல்லியும் லீக் பண்ணிட்டாங்களே!…

latest news

சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி பட டைட்டில் இதுதான்!.. வேணாம்னு சொல்லியும் லீக் பண்ணிட்டாங்களே!…

கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் ரெட்ரொ படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படம் கடந்த 1ம் தேதி வெளியானது. கங்குவா படம் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. முதல் காட்சி முடிந்த உடனேயே இப்படம் நன்றாக இல்லை என நிறைய பேர் சொன்ன வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஒருபக்கம் சூர்யாவை பிடிக்காதவர்களும் முழு வன்மத்தோடு இப்படத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். எனவே, இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. ஆனால், கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடித்த ரெட்ரொ படம் சூர்யாவுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வித்தியாசமான ஸ்டைலில் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்திருந்தார் கார்த்திக் சுப்பாராஜ். அது ஓரளவுக்கு வொர்க் அவுட் ஆகிவிட படம் படம் வெற்றி பெற்றுவிட்டது. நேற்று இப்படத்தின் வெற்றியையும் படக்குழு கொண்டாடியது.

ரெட்ரோ படத்தை முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மாசாணி அம்மன் 2 படத்தை ஆர்.ஜே.பாலாஜி எடுப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது டிராப் ஆகி அந்த வாய்ப்பு சுந்தர்.சி கைக்கு சென்றுவிட இப்போது மூக்குத்தி அம்மன் 2 உருவாகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கருப்பசாமியாகவும், வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஆனால், இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என தலைப்பை வைக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. தலைப்பை தெரிந்துகொண்டால் யாரும் லீக் செய்ய வேண்டாம் என ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கையும் வைத்தார். ஆனால், அதையும் மீறி இப்போது தலைப்பு லீக் ஆகிவிட்டது. இது சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top