Vishal wedding: திமிரு, சண்டக்கோழி போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷால். பல ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். அதேநேரம் நிறைய தோல்விப்படங்களையும் கொடுத்திருக்கிறார். சினிமா நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்.
சினிமா உலகில் நிறைய எதிரிகளையும் கொண்டவர். எப்போதும் தன்னம்பிக்கையுடன் போராடும் குணம் கொண்டவர். ஒருபக்கம் 47 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சில காதல் தோல்விகளையும் கடந்து வந்திருக்கிறார். சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால், சில பிர்ச்சனைகளால் அது பிரேக்கப் ஆனது.
அதன்பின் நடிகை நித்யா மேனனை அவர் காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் விஷாலுக்கு கை கூடவில்லை. நடிகர் சங்க செயலாளர் ஆனபின் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் எனது திருமணம் அங்கு நடக்கும் என விஷால் கூறினார். அப்படி சொல்லியே பல வருடங்கள் ஆகிவிட்டது.
இடையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அதுவும் திருமணத்தில் முடியவில்லை. கடந்த சில வருடங்களாக விஷாலின் நடிப்பில் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்து வந்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விஷால் ‘வருகிற ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறோம். அதன்பின் என் திருமணம் நடக்கும். ஒரு நடிகையை காதலித்து வருகிறேன்’ என சொன்னார்.
இதைத்தொடர்ந்து ‘யார் அந்த நடிகை?’ என பலருக்கும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான், கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் கசிந்தது. இந்நிலையில், இந்த செய்தியை யோகிடா பட விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உறுதி செய்திருக்கிறார்.
சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான யோகிடா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஷால் தனது காதலி என அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அந்த மேடையில் பேசிய உதயகுமாரே அதை முதலில் உறுதி செய்துவிட்டார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…