Categories: latest news

2 சூப்பர்ஸ்டார் ஒரே படத்துலயா!..ஜெயிலர் 2-வில் அந்த நடிகர்!.. ஃபுல் ட்ரீட் இருக்கு!..

Jailer 2: இப்போதெல்லாம் 500 அல்லது 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ள பேன் இண்டியா என்கிற கான்செப்ட் வந்துவிட்டது. அதாவது. ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிடுவார்கள். குறைந்தபட்சம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்கிறார்கள். ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, புஷ்பா 2, கேஜிஎப், கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் அப்படி வெளியாகி வசூலை அள்ளியது.

இதில் பாகுபலி 2, புஷ்பா 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் 1000 கோடி வசூலை தாண்டியது. எனவே, பெரிய நடிகர்கள் எல்லோருக்கும் தங்களின் படம் பேன் இண்டியா படமாக வரவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பல நூறு கோடி வசூல் செய்வதால் நடிகர்களின் சம்பளம் உயர்ந்துவிடும். இரண்டாவது எல்லா மொழி ரசிகர்களிடம் தான் ரீச் ஆக முடியும் என நடிகர்கள் நினைக்கிறார்கள்.

எனவே, தங்களின் படங்களில் எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய நடிகர்களை அழைத்து கேமியோ வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள். மேலும், ஹிந்தியிலும் படம் ஒட வேண்டும் என்பதாக ஹிந்தி நடிகரை வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். அதனால்தான் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நிறைய தமிழ் படங்களில் வில்லன் நடிகராகிவிட்டார்.

வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், லியோ படத்தில் சஞ்சய் தத், ஜெயிலர் படத்தில் சிவ் ராஜ்குமார், மோகன்லால் ஆகியோரையெல்லாம் நடிக்க வைத்தது இதனால்தான். சிவ்ராஜ்குமாரும், மோகன்லாலும் கேமியோ வேடத்தில் நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

பொதுவாக ரஜினி தன்னுடைய படங்களில் வேறு எந்த பெரிய நடிகரையும் நடிக்க அனுமதிக்கமாட்டார். அது தன்னுடைய படமாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், இப்போது அவரும் மாறிவிட்டார். இந்நிலையில்தான் இப்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானை கேமியோ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே கூலி படத்தில் அமீர்கான் கேமியோ பண்ணியிருக்க, இப்போது ஜெயிலர் 2-வுக்காக ஷாருக்கானிடம் பேசி வருகிறார்கள். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்துவிட சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாராக இருக்கிறது. ரஜினி மீது உள்ள மரியாதையில் ஷாருக்கானும் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் பாலையா இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஜெயிலர் 2 படம் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக அமையும் என கணிக்கப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago