அவர்தான் என்னை கெடுத்தார்!. காசு கேட்டா அதை கொடுத்தார்!. ஸ்ரீகாந்த் வாக்குமூலம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

Actor Srikanth: ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் ஸ்ரீகாந்த். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்தார். இவரின் நடிப்பில் மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஒருகட்டத்தில் ஆக்சன் கதைகளில் நடிக்க துவங்கினார். ஆனாலும் இவரால் முன்னனி நடிகராக மாறமுடியவில்லை. எனவே, தெலுங்கு மொழி படங்களில் அண்ணன் வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் அவ்வப்போது இவரின் படங்கள் வெளியாகும். சில மாதங்களுக்கு முன்பு கூட தினசரி என்கிற படம் வெளியானது.

இந்நிலையில்தான் போ..தைப்பொருளான பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். இவர் மட்டுமில்லாமல் வேறு சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. முதலில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரிக்கவுள்ளனர். அவரை தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீகாந்துக்கு பிரசாத் என்பவரே கொடுத்திருக்கிறார். விசாரணையில் ‘அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் 250 கிராம் பாக்கெட் வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாகத்தில் உள்ள என் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். எனக்கு பிரசாத்தை மட்டுமே தெரியும். ஏனெனில் அவர் என்னை வைத்து படம் தயாரித்திருக்கிறார்.

எனக்கு தர வேண்டிய 10 லட்சத்தை நான் கேட்டபோது அதற்கு பதில் போ..தை பொருட்களை கொடுத்து அதற்கு என்னை பழக்கியவர் அவர்தான். நான் பணம் கேட்கும்போதெல்லாம் போ..தை பொருட்களை கொடுத்தார். அப்படித்தான் எனக்கு அந்த பழக்கம் அதிகமானது’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment