விஜய் இல்லனா விஷால்! சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்.. லட்டு ஹீரோயினை தூக்கிட்டாங்க!..

Published on: August 8, 2025
---Advertisement---

Super Good films: தமிழ் சினிமாவில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. 90களில் புதுப்புது காதல் கதைகளை உருவாக்கிய உதவி இயக்குனர்கள் தஞ்சமாகும் இடம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்தான். அனுபவம் இல்லாத இயக்குனர் என்றெல்லாம் பார்க்காமல் கதையின் மீது நம்பிக்கை வைத்து படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.

இந்நிறுவனம் தயாரித்த 95 சதவீத படங்கள் வெற்றிதான். கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி போன்ற பல இயக்குனர்களை இந்நிறுவனம் கோலிவுட்டில் அறிமுகம் செய்தது. நல்ல கதை இருந்தால் போதும். சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகலாம் என்கிற நம்பிக்கையை ஆர்.பி.சவுத்ரி கொடுத்தார்.

விஜயை கவனிக்க வைத்த பூவே உனக்காக படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம்தான். அதோடு, விஜய் நடித்த லவ் டுடே, திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களையும் இந்நிறுவனம் தயாரித்தது. ஆனால், ஜில்லா படத்திற்கு பின் இந்த நிறுவனத்திற்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை.

ஆர்.பி.சவுத்ரி பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஆர்.பி.சவுத்ரிக்கு இருந்தது. விஜயிடம் பலமுறை இது தொடர்பாக பேசப்பட்டது. ஆனால், அவரோ பிடி கொடுக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் இப்போது வாங்கும் சம்பளத்தை ஆர்.பி.சவுத்ரியால் கொடுக்க முடியாது என்பதால்தான்.

இந்நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் துஷரா விஜயன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாகும். ரவி அரசு இப்படத்தை இயக்கவுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஒருபக்கம் விஜயை நம்பி இனிமேல் யூஸ் இல்லை என்பதை புரிந்துகொண்ட சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 100வது படமாக சூர்ய வம்சம் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இதில், சரத்குமார், ஜீவா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment