Connect with us

உயிரின் உயிரே!. தனித்தீவில் ரொமான்ஷ் பண்ணும் சூர்யா – ஜோதிகா!.. செம வீடியோ!…

latest news

உயிரின் உயிரே!. தனித்தீவில் ரொமான்ஷ் பண்ணும் சூர்யா – ஜோதிகா!.. செம வீடியோ!…

Suriya Jyotika: சூர்யா சினிமாவில் நடிக்க துவங்கியபோது ஜோதிகாவுடன் நிறைய படங்களில் நடித்தார். இதில், காக்க காக்க திரைப்படம் இருவருக்கும் முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் பல படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர். அதுவே நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து அது திருமணத்திலும் முடிந்தது.

துவக்கத்தில் இந்த திருமணத்திற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் சம்மதிக்கவில்லை. எனவே, சில வருடங்கள் பொறுமையாக காத்திருந்து அவரின் சம்மதத்தை பெற்றே திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், மகள் என அழகான குடும்பம். திருமணத்திற்குப் பின் ஜோதிகா சினிமாவில் நடிக்கவில்லை.

குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்கள் ஆனபின்னரே நடிக்க வந்தார். அப்படி அவர் நடித்த 36 வயதினிலே, உடன் பிறப்பே, ராட்சஷி, காற்றின் மொழி, தம்பி போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவுக்கு எப்போதும் ஆதரவாக, நல்ல துணையாக ஜோதிகா இருந்து வருகிறார்.

இந்நிலையில்தான், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சீசெல்ஸ் எனும் தீவுக்கு இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். ஹெலிகாப்டரில் அங்கு சென்று இறங்குவது, கடற்கரையில் ரிலாக்ஸ் செய்வது, நீச்சள் குளத்தில் நேரம் செலவழிப்பது உள்ளிட்ட எல்லா மகிழ்ச்சியான தருணங்களையெல்லாம் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவுக்கு கங்குவா படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அடுத்து வந்த ரெட்ரோ படம் ஓரளவுக்கு ஓடியது. இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top