கூலி பட விழாவுக்கு வரணுமா? இந்த அமௌண்ட் கொடுங்க.. டி.ஆர் போட்ட கண்டிஷன்..

Published on: August 8, 2025
---Advertisement---

Coolie: தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக வலம் வருபவர் டி.ராஜேந்தர். திரைத்துறையில் தன்னம்பிக்கைக்கு முக்கிய உதாரணமாக இருப்பவர் இவர். 80களில் ஒருதலை ராகம் துவங்கி மைதிலி என்னை காதலி, உயிருள்ளவரை உஷா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரஜினிக்கே டஃப் கொடுத்தவர்.

ரஜினி படத்தோடு டி,ஆர். படம் வெளியானால் ‘உங்கள் படத்தை தள்ளி வையுங்கள்’ என ரஜினியே டி.ஆரிடம் கோரிக்கை வைத்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. இப்படி ரஜினியையே மிரளவைத்த டி.ஆர். இயக்குனர், நடிகர் என சினிமாவில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அதேநேரம் அவரின் குரலை திரையுலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

கடந்த பல வருடங்களில் டி.ஆர். பாடிய எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திலும் டி.ஆரின் குரலை அனிருத் பயன்படுத்தியிருக்கிறார். அப்படி வெளியான சிக்கடு பாடலின் புரமோ வீடியோவிலும் டி.ஆரை நடனமாட வைத்திருந்தனர்.

இந்நிலையில் கூலி படத்தின் ஃப்ரி ரிலீஸ் விழா வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென டி.ஆருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே விழாவிற்கு வருவேன் என டி.ஆர். சொல்லிவிட்டாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment