கர்நாடகாவில் ரிலீஸாகலனா என்ன!.. கமல்ஹாசனுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!..

Published on: August 8, 2025
---Advertisement---

Thug life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் தக் லைப். நாயகன் படத்திற்கு பின் 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கிறது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலை ரசிகர்கள் பலரும் ரிப்பீட் மோடில் கேட்டு ரசித்து வருகிறார்கள். இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்காக கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா எல்லோரும் பல இடங்களுக்கும் போய் புரமோஷன் செய்தார்கள். ஒரு விழாவில் பேசிய கமல் ‘தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி உருவானது’ என சொல்லிவிட அதை சில கன்னட அமைப்புகள் கையில் எடுத்து கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகும் என மிரட்டினார்கள். ஆனால், கமலோ மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார்.

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கமலுக்கு 20 கோடி நஷ்டம் என சொல்லப்படுகிறது. எனவே, கமல் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிபதியும் கமலை மன்னிப்பு கேட்க சொல்ல கமலோ தான் பேசியது பற்றி விளக்கம் அளித்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல் தரப்பு சொல்லிவிட்டது.

அதோடு, கர்நாடகாவில் நாளை படம் வெளியாகாது. ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது. இந்நிலையில், தக் லைப் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைப் படம் தமிழகத்தில் வெளியாகவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, நாளை தமிழகத்தில் தியேட்டர்களில் 5 காட்சிகள் வெளியானால் படம் வசூலை அள்ளும். கர்நாடகாவில் கமல் விட்ட 20 கோடிக்கும் மேல் தமிழகத்திலேயே அவருக்கு கிடைத்துவிடும் என சொல்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment