Categories: latest news

எஸ்.கே-வுக்காக ஹிஸ்ட்ரியை மாற்றும் வெங்கட் பிரபு!.. அவருக்கும் வேற வழி இல்ல!..

Sivakarthikeyan: அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விர்ரென மேலே போய்விட்டது. ஏனெனில் அப்படம் 300 கோடி வசூலை தாண்டிவிட்டது. அதற்கு முன் 40 லிருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த சிவகார்த்திகேயன் அமரன் ஹிட்டுக்கு பின் 70 கோடி சம்பளம் கேட்கிறார். அதோடு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என முடிவெடுத்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதாகொங்கரா இயக்கத்தில் மதராஸி போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பராசக்தி மிகவும் முக்கியமான படமாகும். ஏனெனில், 1960களில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதையாகும். இதிலிருந்து சூர்யா விலகவே சிவகார்த்திகேயன் உள்ளே போய்விட்டார்.

ஒருபக்கம், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருந்தார். ஏனெனில், விஜயின் இடத்தை பிடிக்கப்போவது சிவகார்த்திகேயன்தான் என பலரும் பேச கோட் படத்தில் விஜயை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கலாம் என திட்டமிட்டார். ஆனால் கோட் படத்தின் ரிசல்ட் பெரிதாக இல்லை என்பதால் வெங்கட்பிரபுவை டீலில் விட்டார்.

எனவே, பல மாதங்களாக சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க முயற்சிகள் செய்தார். இடையில், பராசக்தி படத்திற்கு பின் குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டார். அறிவிப்பும் வெளியானது. ஏற்கனவே டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவும் பேசப்பட்டது. அதில் சில குளறுபடிகள் நடக்கவே வினாயக் சந்திரசேகர் உள்ளே வந்தார். ஆனால், அந்த படத்தில் நடிக்க மோகன்லால் தேவைப்பட்டார். ஆனால், அவரின் கால்ஷீட் கிடைக்க தாமதமாகும் என்பதால் மீண்டும் சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்தார்.

ஆனால், சிவகார்த்திகேயன் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறரா அல்லது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருபக்கம், வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்கிறார்கள். வெங்கட்பிரபுவின் முதல் படத்திலிருந்து கோட் வரை அவருக்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்தார். வேறு இசையமைப்பாளரிடம் அவர் போனதே இல்லை. ஆனால், சிவகார்த்திகேயன் அனிருத்தின் இசையையே விரும்புவார் என்பதால் வேறு வழியில்லாமல் வெங்கட்பிரபு ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி படத்திற்கு பின் வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பரா என்பது தெரியவில்லை.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago