கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குரூப்பில் மூன்றெழுத்த நடிகர், நடிகை!.. சூடுபிடிக்கும் விசாரணை!...

Actor Krishna: கடந்த சில நாட்களாகவே திரையுலகில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் நடிகர் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். துவக்கத்தில் இருவருமே இதை மறுத்தாலும் விசாரணையில் இது உண்மை என்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ரோஜாக்கூட்டம் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய ஸ்ரீகாந்த் இதுவரை பல படங்களிலும் நடித்திருக்கிறார். காதல் திருமணம், 3 குழந்தைகள் என திருமண வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருந்தாலும் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் ஏற்பட்ட மன உளைச்சல், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தடம் மாறியிருக்கிறார் என்கிறார்கள். இப்போது சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஜாமீன் கேட்டு காத்திருக்கிறரர்.

ஸ்ரீகாந்த் போ...தை பொருட்களை பயன்படுத்தியிருக்கிறார் என்றால் நடிகர் கிருஷ்ணாவோ வாட்ஸ் அப் குரூப் ஒன்றையே நடத்தி வந்திருக்கிறார். இவர் இயக்குனர் விஷ்ணு வர்தனின் தம்பி. கழுகு, யாமிருக்க பயமேன், மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். போலீசார் தன்னை தேடுவது தெரிந்ததும் தனது செல்போனில் இருந்த எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டார். போலீசார் அதை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கிருஷ்ணாவின் வாட்ஸ் அப் குரூப்பில் மூன்றெழுத்து நடிகர் மற்றும் நடிகை உள்ளிட்ட பலரும் இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அதோடு, நான்கெழுத்து பெயர் கொண்ட இசையமைப்பாளரும் இதில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும் மூன்றெழுத்து நடிகர் தனுஷ் எனவும், நடிகை திரிஷா எனவும், இசையமைப்பாளர் அனிருத் எனவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ விஜயும் மூன்றெழுத்துதான் என பேச துவங்கிவிட்டனர்.

சினிமா உலகில் பார்ட்டி என்பது சகஜம். பெரும்பாலும் மது விருந்துதான் அதிகம் நடக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் மதுவை தாண்டி போ...தை பொருட்களை பார்ட்டிகளும் நடைபெற துவங்கிவிட்டது. பாடகி சுசித்ரா இதுபற்றி பல தகவல்களை ஊடகங்களில் பேசி வருகிறார். கமல்ஹாசன் கொடுக்கும் பார்ட்டிகளில் கொக்கைன் கொடுக்கப்படும் எனவும் சொல்லி பகீர் கிளப்பியிருக்கிறார். இதுவெல்லாம் உண்மையா? போலீசார் விசாரிப்பார்களா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.