ஷங்கரின் வீட்டுக்கே போன ரஜினி!.. இந்தியன் 3 டேக் ஆப் ஆனதன் பின்னணி!...

by MURUGAN |
indian3
X

Indian3: ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் லஞ்சத்தை எதிர்த்து களம் இறங்கிய கதை. லஞ்சம் வாங்கினால் இந்தியன் தாத்தா கத்தியால் குத்துவார் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2-வை எடுத்தார் ஷங்கர். லைக்கா புரடெக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. இந்தியன் 2 துவங்கும் போது கமலுக்கு பேசிய சம்பளம் 30 கோடி. ஆனால், விக்ரம் சூப்பர் ஹிட் ஆனதால் கமல் அதிக சம்பளம் கேட்டார். ஒருபக்கம், ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார்.


லைக்காவுக்கும், ஷங்கருக்கும் முட்டிக்கொள்ள ‘இந்தியன் 2-வை முடிக்கமால் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது’ என லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டு ஷூட்டிங் துவங்கியது. ஒரே நேரத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என 2 படங்களையும் ஷங்கர் இயக்கினார்.

இந்தியன் 2-வுக்கு பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதோடு, படம் ட்ரோலிலும் சிக்கியது. ஷங்கர் ஒரே ஃபார்முலாவில் படம் எடுக்கிறார். ஒரே கிரின்ச்சாக இருக்கிறது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பலரும் சொன்னார்கள். ஒருபக்கம், இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு பாடல் காட்சியும், சில கிராபிக்ஸ் வேலைகளும் மட்டுமே பாக்கி இருக்கிறது.

ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் கமல் இதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான் ரஜினி கமலிடமும், லைக்காவிடமும் பேசி இந்தியன் 2 டேக் ஆப் ஆக உதவியிருக்கிறார் என நேற்று செய்திகள் வெளியானது. ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள். ரஜினியை தொடர்பு கொண்டு பேசிய லைக்கா சுபாஷ்கரன் ‘இந்தியன் 2-வில் இவ்வளவு கோடி முதலீடு செய்திருக்கிறோம். நீங்கள் கமல்,ஷங்கர் இருவரிடமும் பேசி படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்’ என கோரிக்கை வைத்தாராம்.


உடனே களத்தில் இறங்கிய ரஜினி ஷங்கரின் வீட்டுக்கே நேரில் போயிருக்கிறார். படத்தை முடிக்க 6 கோடி செலவாகும் என ஷங்கர் சொல்ல அங்கிருந்தவாறே சுபாஷ்கரனுக்கு போன் போட்டிருக்கிறார் ரஜினி. ‘6 கோடி முடியாது ஒன்றரை கோடியில் முடிக்க சொல்லுங்கள்’ என சுபாஷ்கரன் சொல்ல ஷங்கர் அப்செட் ஆகிவிட்டார். அதன்பின் ரஜினி பேசி சுமூக முடிவை எட்ட உதவி செய்திருக்கிறார்.

இந்தியன் 3 ரிலீஸாகும் வரை ஷங்கரும், கமலும் சம்பளம் கேட்கக் கூடாது. படம் வியாபாரம் ஆகும்போது அவர்களின் சம்பளத்தை கொடுத்துவிடுகிறோம் என லைக்கா தரப்பு சொல்லியிருக்கிறது. கமலும், ஷங்கரும் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்லப்படுகிறது. கமல் நடித்த காட்சிகளை ஷங்கர் ஏற்கனவே எடுத்துவிட்டார் என்பதால் மற்ற நடிகர்கள் மட்டுமே இதில் நடிக்கவுள்ளனர். விரைவில் இதற்கான வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story