மனைவியை பிரிந்து வாழ்கிறாரா விஜய்?!. நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சொல்வது என்ன?....

Actor vijay: கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வருபவர் விஜய். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. 225 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். அதேநேரம், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாகவும் அவர் முடிவெடுத்து கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் எவ்வளவு வரவேற்பு கொடுக்கப்போகிறார்கள் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.
ஒருபக்கம், விஜய் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார் என பல வருடங்களாக செய்திகள் அடிபடுகிறது. ஏனெனில், சென்னை நீலாங்கரை பகுதியில் பெரிய பங்களாவில் வசிக்கும் விஜய் தனியாகவே வசித்து வருகிறார். அவரின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் இருவருமே லண்டனில் தனது தந்தையுடன் வசிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

வழக்கமாக விஜயின் படங்கள் தொடர்பான விழாக்களுக்கு வரும் சங்கீதா கடந்த பல வருடங்களாகவே அப்படி வருவதில்லை. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார் என செய்தி வெளிவந்த போதும் அவர் அப்பா விஜயை போய் சந்திக்கவில்லை. இது தொடர்பாக டிவிட்டரில் கூட விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
எனவே, விஜய் முழுக்கவே தனது குடும்ப உறவுகளிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டது போலவே பார்க்கப்பட்டது. இதுபற்றி எங்கேயும் பேசுவதும் இல்லை. இதுபற்றி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டாலும் அது பற்றி பேச முடியாது என சொல்லிவிடுகிறார். ஒருபக்கம் நடிகை திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக இருக்கிறார். விஜயின் பிறந்தநாள் பார்ட்டியில் கூட திரிஷா கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போதிலிருந்து இப்போது வரை விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் சஞ்சீவ் இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார். விஜய் தனது குடும்பம் ஊடக வெளிச்சத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்’ என பேசியிருக்கிறார்.