கிங் காங் மகள் கல்யாணத்துக்கு போகாத விஜய் எங்க போயிருக்கார் பாருங்க!.. வைரல் போட்டோஸ்!...

Actor vijay: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது. 225 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு இவரின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. ஆனால், அவரோ சினிமாவை விட்டு அரசியலுக்கு போவது என முடிவெடுத்திருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை செய்து வந்தார்.
அதன்பின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். மாநாடெல்லாம் நடத்தி என்னால் அரசியல் பண்ண முடியும் என காட்டினார். எல்லா மேடைகளிலும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், மக்களை சந்திக்காமல் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனம் இவர் மீது இருக்கிறது.

மழை வெள்ளத்தில் மக்கள் கஷ்டப்பட்டபோது நேரில் போகாத விஜய் கீர்த்தி சுரேஷின் கல்யாணத்திற்கு திரிஷாவோடு போனார். முன்பாவது அவர் நடிகர் மட்டுமே. அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அரசியலுக்கு வந்தபின்னரும் விஜய் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என அவரை பலரும் விமர்சனம் செய்தனர். அதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி செய்தார். இதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேடைகளில் ஆக்ரோஷமாக பேசி வரும் விஜய் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் பிரச்சனைகளுக்காக போராட வேண்டும். ஆனால், அவர் அதை செய்வதே இல்லை என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள். அதேசமயம் ஜனநாயகன் பட ஷூட்டிங் முடிந்த நிலையில் விரைவில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் காமெடி நடிகர் கிங் காங் மகளின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர், தமிழிசை சவுந்தர்ராஜன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார் கிங் காங். விஜய்க்கு பத்திரிக்கை வைக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை என சொல்லியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார். ஆனால், விஜய் அங்கு போகவில்லை.

இந்நிலையில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் நேற்று கலந்து கொண்டார். பட்டு சட்டை, வேட்டி அணிந்து சிரித்த முகத்துடன் அவர் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என் மகள் திருமணத்திற்கு விஜய் சார் வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அவரை சந்தித்து பத்திரிக்கை வைக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை’ என வருத்தத்தோடு கிங்காங் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.